அமெரிக்காவின் 50% வரி உயர்வு.. இந்தியாவுக்கு எதிரான புதிய பேரரசு அரசியல்! அழுத்திச் சொன்ன கமல்ஹாசன்!
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிராக விரித்துள்ள 50 சதவீத வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பு இந்தியாவுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் எனவும், துணிந்து தெளிவான பார்வையுடன் முன்னேறினால் எந்த பேரரசு விளையாட்டுகளையும் தாண்டி நம்மால் செல்ல முடியும் என நடிகரும் எம்பி-மான கமலஹாசன் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார், உக்ரைன்ன் போரை காரணம் காட்டி இந்த கருத்தை டொனால்ட் டிரம்ப் கூறி இருக்கிறார்.
அதே நேரத்தில் மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய்யை தருவதால் இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரியை விரித்து இருக்கிறார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

டிரம்ப் வரி
இந்த நிலையில் வரி என்ற பெயரில் பேரரசு விளையாட்டை அமெரிக்கா கையில் எடுத்திருப்பதாகவும் இந்தியர்கள் ஒன்றுபட வேண்டிய தருணம் இது என நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமலஹாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்," அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக விதித்துள்ள 50 சதவீத வரி உயர்வு இன்று உலக அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு நாடுகளின் நிஜ அரசியலில், தண்டனைக்கு அழகு பெயராக "கொள்கை" என காட்டப்படுவது புதிதல்ல.

கமல்ஹாசன்
நூற்றாண்டுகளாகக் காலனித்துவ ஆட்சியின் சுரண்டல்களை தாங்கிய இந்தியா, இன்று புதிய வடிவில் அதே சுரண்டலுக்கு முகங்கொடுக்கிறது. இந்த முறை ஆயுதமாக வரி உயர்வு. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள 50% சுங்கவரி உயர்வு, நேரடியாக வர்த்தகத்தையே குறிவைக்கவில்லை. இந்தியா தனது ஆற்றல் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதற்காக தண்டிக்கப்படுவதாகவே பலர் பார்கின்றனர். "உக்ரைன் பிரச்சனை" என்கிற பெயரில் விதிக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள், உண்மையில் இந்தியாவின் சுயமரியாதை நிலைப்பாட்டை தாக்க முயல்கின்றன.
ஆத்மநிர்பர் இந்தியா
சீனாவை அமெரிக்கா இதே தீவிரத்தோடு அணுகுகிறதா? இல்லை. ஏனெனில் சீனா தற்போது அரிதான கனிமங்கள், சோலார் பேனல்கள், லித்தியம் பேட்டரிகள், அரிய உலோகங்கள் போன்ற முக்கிய சப்ளை செயின்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அமெரிக்காவே அந்நாட்டை தான் சார்ந்துள்ளது. அதனால் சீனாவிடம் வரி உயர்வு "மெல்லிய குரலில்" மட்டுமே பேசப்படுகிறது. ஆனால் இந்தியா மீது "சுத்தியலாய்" தாக்கப்படுகிறது. இதுவே இன்றைய புலனான பாடம் - ஆத்மநிர்பர் பாரத் என்பது வெறும் சுலோகமல்ல; அது ஒரு தேசிய காப்பீடு.
இந்தியா வர்த்தகம்
இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, தொழில்முனைவோர் மற்றும் புதுமையாளர்களின் நாகரிகமும் ஆகும். திருப்பூர், சூரத், நொய்டா போன்ற நகரங்களில் உழைக்கும் துணிநூல் தொழிலாளர்களும், ஆந்திர மாநில இறால் விவசாயிகளும், குஜராத், மகாராஷ்டிரா ஆபரண தொழிலாளர்களும், எங்கள் எஃகு தொழிலாளர்களும் - இவர்களது உழைப்புதான் நம் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. இவர்களின் வாழ்வாதாரம் அரசியல் விளையாட்டுகளால் பாதிக்கப்படக் கூடாது.
பொருளாதார பாதிப்பு
இதனால் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அவர்கள் முன்வைக்கும் பரிந்துரைகள்: சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) - 2 ஆண்டுகளுக்கு கடன் தவணை தள்ளுபடி, அவசர நிதி உதவி. ஏற்றுமதியாளர்கள் - குறைந்த வட்டி கடன்கள், ஏற்றுமதி கடன் உத்தரவாதம் விரிவாக்கம். பொருளாதார சீரான வசதி - நிலுவையில் உள்ள GST, RODTEP, RoSCTL ரீபண்டுகளை உடனடியாக வழங்குதல். செலவுக் குறைப்பு - மின் கட்டணத்தில் தற்காலிக சலுகை, புதிய சந்தைகளை அடைய சரக்கு கட்டண உதவி. சந்தை விரிவாக்கம் - இந்திய பொருட்களுக்கு புதிய உலக சந்தைகள் திறக்க அரசின் நேரடி முன்னெடுப்பு.
சப்ளை செயின்
ஆனால் இது வெறும் நெருக்கடி மேலாண்மை மட்டுமல்ல. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா தனது இடத்தை சப்ளை செயின்களை உறுதியாகப் பிடிக்க வேண்டும். அரிதான கனிமங்கள், செமிக்கண்டக்டர்கள், பேட்டரிகள், பவர் மின்னணுக்கள், மேம்பட்ட துணிநூல் போன்ற துறைகளில் நம்மை மட்டுமே நம்பும் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான், கடல் கடந்த நாடுகளின் சுங்கவரி அச்சுறுத்தல்களில் இருந்து நாம் விடுபட முடியும். இந்தியா தன் நண்பர்களை வார்த்தைகளால் அல்ல, செயலால் மதிக்கும் நாடு. இன்று அமெரிக்கா விதிக்கும் வரி, நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். நாம் ஒன்றுபட்டு, துணிந்து, பார்வையுடன் முன்னேறினால், எந்த பேரரசு விளையாட்டுகளையும் தாண்டிச் செல்ல முடியும்." என கூறியுள்ளார்.
-
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
தாக்க தயாராக.. 12 அணு குண்டுகளை ரெடியாக வைத்த இந்தியா.. வரலாற்றில் இதுதான் முதல் முறை.. குறி யாருக்கு? பெரும் பதற்றம் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications