உண்மை உப்புக்கல்! பொய் விற்கக்கூடாத ரத்தினக்கல்! கவிஞர் வைரமுத்து கவிதை
சென்னை: ஒவ்வொரு மனிதனும் எதை செலவழிக்க வேண்டும். எதை செலவழிக்க கூடாது என்பது குறித்தும், உண்மை என்பது அன்றாட உப்புக்கல்,
பொய் என்பது விற்கக்கூடாத ரத்தினக்கல் என கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் உண்மை, பொய்க்கு இடையேயான வித்தியாசத்தை கூறியுள்ளார்.
தமிழகத்தில் முன்னணி கவிஞர், பாடலாசிரியராக இருப்பவர் வைரமுத்து. இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா, உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர் சமூகத்தில் நிகழும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து தனது டுவிட்டரில் கவிதை நடையில் கருத்து தெரிவித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் போர் வேண்டாம் என்று வைரமுத்து கவிதை வெளியிட்டு இருந்தார். அதேபோல் கைகளும் கால்களும் உங்களை இன்னும் கைவிடவில்லை என்பதை அறிவது எப்படி என்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு கவிதை நடையில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் உண்மை, பொய்க்கு இடையேயான வேறுபாட்டை கூறி செலவழிக்க கூடியது எது, செலவழிக்க கூடாதது எது என்பது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் எழுதி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். நெற்றித்தீ எனும்ஹேஷ்டேக்கில் இடம்பெற்றுள்ள அவரது பதிவு வருமாறு:
செலவழிக்கக் கூடியது
உண்மை
செலவழிக்கக் கூடாதது
பொய்
பொய்யென்ற செல்வத்தைச்செலவழிக்கிறவன்
ஏழையாகிறான்
மற்றும்
இறக்கத் தொடங்குகிறான்
உண்மை
அன்றாட உப்புக்கல்
பொய்
விற்கக்கூடாத ரத்தினக்கல்
#நெற்றித்தீ
என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications