கோர்ட் ‘விடுதலை’ செஞ்சாலும் உண்மை வந்துரும்.. ராதாரவியின் ‘2 அக்யூஸ்ட்’ பேச்சை சுட்டிய திமுக எம்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடியும் அமித்ஷாவும் அக்யூஸ்டுகள் என்று பாஜகவை சேர்ந்த நடிகர் ராதாரவி பேசிய நிலையில், அதை சுட்டிக்காட்டி நீதிமன்றமே நல்லவர் என்று கூறி விடுதலை செய்தாலும் உண்மை வெளியே வரும் என திமுக எம்பி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இந்தியாவில் ரெண்டே ரெண்டு அக்யூஸ்டுங்க இருக்காங்க! மோடி, அமித்ஷா பேரை சொன்ன ராதாரவி

    தமிழ்நாடு திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு

    தமிழ்நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகரும் பாஜக பிரமுகருமான அண்ணாமலை, "தற்போது நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலும் பாஜகவா திமுகவா எனும் நிலை வரும். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் எம்பி தேர்தலில் பாஜகவே வென்று மத்தியில் ஆட்சி செய்யும். மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ந்தது போல் தமிழகத்திலும் வரும்.

    அண்ணாமலையின் பேச்சுத்திறமை

    அண்ணாமலையின் பேச்சுத்திறமை

    அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் பேச்சுகளை நான் கேட்டுள்ளேன். ஆனால் இந்த அண்ணாமலையை போல் சொந்த பேச்சு திறமை கொண்டவரை நான் பார்த்ததே இல்லை. எனக்கு சகட்டுமேனிக்கு பேசித்தான் பழக்கம். அண்ணாமலைதான் அடுத்த முதல்வர். காசு கொடுத்து கூடும் கூட்டம் பாஜக இல்லை. தானா சேர்ந்த கூட்டம். கருணாநிதி குடும்பத்திலிருந்து முதல்வராக ஸ்டாலின் வந்துள்ளது எனக்கு சந்தோஷம்தான்.

    2 அக்யுஸ்டுகள்

    2 அக்யுஸ்டுகள்

    மகாராஷ்டிராவில் ஆப்பு வைத்தோமே பார்த்தீர்களா. ஆனால் நம்ம கட்சியை சேர்ந்த பட்னவீஸ் முதல்வர் பதவிக்கு ஆசைப்படாமல் துணை முதல்வராக பொறுப்பேற்றது அவரது பெருந்தன்மை. இந்தியாவில் ரெண்டு அக்யூஸ்டுங்க இருக்காங்க. பெரிய அக்யூஸ்டுங்க. ஒன்னும் மோடி ஜி இன்னொன்னு அமித்ஷா. நீங்கள் பத்தாயிரம் தடவை ஒன்றிய அரசு என சொன்னாலும் சரி , 10 ஆயிரம் தடவை திராவிட மாடல் என சொன்னாலும் சரி அவங்க ரெண்டு பேரும் கண்டுக்கவே மாட்டாங்க.

    திமுக எம்.பி. அப்துல்லா

    திமுக எம்.பி. அப்துல்லா

    ராதாரவியின் இந்த பேச்சு பெரும் விவாதத்திற்கு வழிவகுத்து இருக்கிறது. இந்த ராதாரவி பேசிய இச்செய்தியை தனது முகநூலில் பகிர்ந்த திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா, கோர்ட் "நல்லவனுங்கன்னு" சொல்லி விடுதலை செய்தாலும் உண்மைனு ஒண்ணு இருக்குல்ல!! அது யார் வாயிலயாவது வந்துதானே ஆகணும்!! என்று பதிவிட்டு இருக்கிறார். சமீபத்தில் குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்று உச்சநீதிமன்றம் அவரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+