அதை ஏன் கேக்குறீங்க.. டிடிஎப் வாசன் ரசிகைகளாக மாறிய செவிலியர்கள்.. எட்டி எட்டி பார்த்த நர்சுகள்
சென்னை: அது விபத்து இல்ல ஸ்லிப் ஆகி கீழே விழுந்துட்டேன் என்று கூல் ஆக பதில் சொன்ன டிடிஎப் வாசனுக்கு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரை பார்க்க ரசிகர்கள் மட்டுமல்லாது செவிலியர்களும் ஆர்வத்துடன் குவிந்தனர்.
யூடுயூபர் டிடிஎப் வாசன் செய்யும் பைக் சாகசத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது போல விபத்திலும் சிக்குவார். மஞ்சள் வீரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார் டிடிஎப் வாசன்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காஞ்சீபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்று தனது பைக்கில் வீலீங் செய்தார். அப்போது பைக் தடுமாறி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் வாசன் தூக்கி வீசப்பட்டார் பைக் பலமுறை உருண்டது.
மிகப்பெரிய விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன் சாலையோரம் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்ட அவரது நண்பர்கள்"மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து வாசனுடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என பரிந்துரை செய்த நிலையில் டிடிஎப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட டிடிஎப் வாசன், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை புழல் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற வாசன் தனக்கு கையிலும் இடுப்பிலும் வலி ஏற்பட்டதாக புழல் சிறை ஜெயிலரிடம் தெரிவித்ததால் அவருக்கு மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவர் கை கட்டு கூட இல்லாமல் கையை வீசி கூலாக நடந்து சென்றார். இந்த வீடியோ வைரலானது.
அப்போது செய்தியாளர்கள் சிலர் விபத்து பற்றி டிடிஎப் வாசனிடம் கேட்டனர். அதற்கு வாசனோ, அது அவ்வளவு பெரிய விபத்து இல்லை ஸ்லிப் ஆகி விட்டது என்று கூலாக சொன்னார். இந்த நிலையில் உடல் வலி, இடுப்பு வலி என்று சொன்ன டிடிஎப் வாசனுக்கு கையில் கட்டு போட்ட நிலையில் முழு உடலையும் பரிசோதனை செய்யப்பட்டது.
டிடிஎப் வாசனை பார்க்க அவரது ரசிகர்கள் எனப்படும் சின்னஞ்சிறு வாண்டுகள் ஸ்டான்லி மருத்துவமனையில் குவிந்தனர். டிடிஎப் வாசனை பார்க்க பலரும் வரிசை கட்டி நின்றனர். செவிலியர் கூட ஆர்வத்தோடு வந்து பேசி விட்டு சென்றது வைரலானது. முழு பரிசோதனையும் நடந்து முடிந்த பிறகு வாசன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
டிடிஎப் வாசன் தொடர்ந்து அதிவேகமாக பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கி வருவதால் அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். டிடிஎப் வாசனை வருகிற அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications