டிடிஎஃப் செய்தால் குற்றம்? விஜே சித்து செய்தால்? காருக்கு ஒரு நீதி? பைக்குக்கு ஒரு நீதியா?
சென்னை: போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவதற்கு சட்டப்படி என்ன தண்டனை? இந்தச் சட்டம் இரு சக்கர வாகனத்திற்கு மட்டும்தான் பொருந்துமா? காருக்கு பொருந்தாதா?
டிடிஎஃப் வாசன் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது 308 விதியின் படி வழக்குப் போட்டு அவரை கைது செய்திருந்தது காவல்துறை. கடந்த சில ஆண்டுகளாகவே வாசன் எதைச் செய்தாலும் அவரது செயல் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதைப் பொதுமக்கள் அனைவரும் அறிவர். அவர்தான் சட்டத்தை மீறுகிறாரா? அல்லது அவர் செய்வது மட்டும் குற்றமாக எடுத்துக் கொள்ளப்படுகிறதா? என்பதில் ஒரு குழப்பம் நீடிக்கிறது.

யூடியூபர் இர்ஃபான் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா என்று மருத்துவ பரிசோதனை செய்ததற்காக அவர் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்று பலரும் கூறிவந்த நிலையில், அவரை அழைத்து பெண் குழந்தைகள் பற்றி நாட்டு மக்களுக்கு நற்சிந்தனைகளை விதைக்கும்படி வீடியோ வெளியிடுங்கள். தண்டனை எல்லாம் ஒன்று கிடையாது. நீங்கள் போய்வரலாம் என்று அரசு அதிகாரிகள் அனுப்பி வைத்துவிட்டனர். பெண் சிசுவைக் காப்பாற்றுவதற்காக அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறது.
பல்வேறு வகைகளில் விளம்பரங்களைச் செய்கிறது. அதற்கு எல்லாம் கட்டுப்படாமல்தான் இர்ஃபான் இந்தத் தவறை செய்துள்ளார். படித்த இளைஞரே தன் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார் என்றால், அவரது பிற்போக்கு மனநிலையை அதிகாரிகள் கண்டித்துக் குறைந்த பட்ச அபராதமாவது விதித்திருக்கவேண்டும். ஆனால், 'நீங்கள் போய் வாருங்கள்' என அனுப்பி வைத்துவிட்டார்கள் என்று செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

அதே டிடிஎஃப் வாசன், போன் பேசிக் கொண்டு வண்டி ஓட்டியதற்காகப் பிரிவு 308 பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு போன் பேசியதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அதை விசாரித்து அபராதம் விதிக்கலாம். ஆனால், கொலைவெறியோடு அவர் மீது 308 பிரிவைப் பயன்படுத்தியதை நீதிபதியே கண்டித்திருக்கிறார்.
இந்திய வாகன சட்டமானது வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினால், அவர் செய்தது முதல் குற்றமாக இருந்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்கிறது. குறிப்பிட்ட நபர் மீண்டும் மீண்டும் தவறு செய்தால், 300 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சட்டப் பிரிவு 177 கூறுகிறது. அதாவது 300 ரூபாய் தண்டனைக்குச் சிறை வரை அவரை அழைத்துக் கொண்டு போய் உள்ளது காவல்துறை.

அதைவிடக் குற்றம் எனச் சொல்லப்படும் இர்ஃபான் செயலுக்கு மருத்துவத்துறை அறிவுரை வழங்கி அனுப்புகிறது. இந்த விநோதம் தான் பொதுமக்களாகிய பலரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஒருவர் விஐபியாக இருந்தால் ஒரு நியாயம். சாதாரண நபராக இருந்தால் மற்றொரு நியாயமா என்று மக்கள் கேட்கிறார்கள்.
இதே சர்ச்சையில் விஜே சித்து சிக்கி இருக்கிறார். அவர் வாகனத்தில் போன் பேசிக் கொண்டே சென்ற வீடியோவை சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீடியோ தேதி, நாள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அவர் மீது இதே 308 வழக்குப் போடப்படுமா? என்பதை காவல்துறையினர்தான் விளக்க வேண்டும்.

இந்நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சேவை, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் பதிவு ரத்து, கூடவே வாகன உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை ஆகியவை அடங்கிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி இன்று முதல் அது நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், முறைப்படியான அறிவிப்புகள் எதையும் தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை.
இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டிற்குப் பொருந்துமா? நடைமுறைப்படுத்தப்பட உள்ளதா? எனது குறித்து அரசு ஆணை எதையும் பிறப்பிக்கவில்லை. ஆகவே, இது குறித்து விளக்கம் கேட்க இணையச் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் குமரேசனிடம் பேசினோம்.

அவர், "மோட்டார் வாகன சட்டப்படி எந்த வாகனத்தை ஓட்டும் போதும் போன் பேசக் கூடாது. அது இரு சக்கரமாக இருந்தாலும் சரி, நான்கு சக்கரமாக இருந்தாலும் சரி. அது தவறுதான்.
ஆனால் நடைமுறையில் காவல்துறையினர் இரு சக்கரத்தில் போகும்போது பேசுபவரை மட்டுமே பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். காரணம், அவர்கள்தான் பெரும்பான்மை. காரில் போகின்றவர்கள் பேசினால் பிடிப்பதில்லை.
சட்டம் இருவருக்கும் பொதுதான். அது நடைமுறையில் இல்லாததுதான் துயரம். மத்திய மோட்டார் வாகன சட்டத்திருத்தம் தமிழ்நாட்டிற்குச் செல்லுமா? இல்லையா என்பதைத் தமிழக அரசு விளக்கம் அளிக்கவில்லை. இதுவரை எந்த அறிவிப்பும் முறைப்படி வழங்கப்படவில்லை" என்கிறார்.
போன் பேசிக் கொண்டு போன டிடிஎஃப் வாசன் வழக்குபற்றி பேசிய வழக்கறிஞர் வழக்கறிஞர் விக்னேஷ் முத்துக்குமார், "டிடிஎஃப் வாசன் மீது 308 வழக்குப் போட்டு கைது செய்துள்ளது காவல்துறை.
இந்த மாதிரியான விதிமுறை மீறல் மீது அபராதம் மட்டும்தான் விதிப்பார்கள். இந்த 308 வழக்குப் போடமாட்டார்கள். ஆனால், வாசன் மீது போடப்பட்டது. விதிப்படி இது செல்லாது. இதைத்தான் மாஜிஸ்திரேட்டும் சுட்டிக்காட்டி இருந்தார். அதை நீக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆகவே வாசனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஏதோ வாசன் மட்டும் வாகனம் ஓட்டும் போது போன் பேசிக்கொண்டு போவதைப் போல வீடியோ போடவில்லை. பல யூடியூபர்கள் அப்படி வீடியோ போடுகிறார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அந்த அத்தனை பேர் மீதும் எடுத்திருக்க வேண்டும்" என்கிறார்
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications