கை இன்னும் சரியில்லை ப்ரோ! சக கைதிகள்தான் என்னை குளிக்க வைத்து தலையை துவட்டினர்.. டிடிஎஃப் வாசன்
சென்னை: என்னை சக கைதிகள்தான் குளிக்க வைத்து எனது தலையை துவட்டி விட்டனர் என புழல் சிறையிலிருந்து வெளியே வந்த யூடியூபர் டிடிஎப் வாசன் தெரிவித்திருந்தார்.
கோவையை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் பைக் சாகசம் செய்து வீடியோக்களை தனது யூடியூபில் வெளியிட்டு வந்தார். அவருடைய யூடியூப் சேனலுக்கு 45 லட்சத்திற்கும் கோடிக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இவர் விலை உயர்ந்த சாகச பைக்குகளில் சாகசங்களை செய்வதாால் இவருக்கு இளைஞர்கள் நிறைய பேர் ரசிகர்களாக உள்ளனர். இவர் சாலைகளில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுகிறார் என இவர் மீது நிறைய புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
போலீஸாரும் பல முறை டிடிஎஃப் வாசனை எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்ற போது வீலிங் செய்தார். அப்போது அவருடைய பைக்கில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு வலது கை முறிந்தது. பைக்கும் பல அடி தூரம் பறந்து போய் விழுந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து புழல் சிறயில் அவர் அடைக்கப்பட்டார்.
அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு, அதாவது 5.10.2033 வரை வாகனம் ஓட்ட கூடாது என போக்குவரத்து துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஜாமீன் கோரியிருந்த நிலையில் அவருடைய ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த ஜாமீன் மனு விசாரணையின் போது வாசனின் பைக்கை ஏன் எரித்துவிடக் கூடாது, அவரது யூடியூப் சேனலை ஏன் இழுத்து மூடக் கூடாது என்று நீதிபதி கடுமையான கேள்வியை எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாசன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 3 வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் படி வேட்டி சட்டை அணிந்து கொண்டு சிறையிலிருந்து நேற்று வெளியே வந்த டிடிஎஃப் வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில் 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து, இதெல்லாம் நியாயமே இல்லை. என்னை திருத்த வேண்டும் என செய்தது போல் இல்லை, எனது வாழ்க்கையை அழிக்க வேண்டும் என செய்தது போல் இருக்கிறது. லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். விபத்தில் கை போனதை விட லைசன்ஸ் இருப்பதால் தொடர்ந்து பைக் ஓட்டுவேன்.
ஜெயிலில் எனக்கு உணவும் மருத்துவ உதவிகளும் நன்றாக இருந்தது. கை இன்னும் சரியாகவில்லை, மீண்டும் ஆபரேஷன் செய்ய வேண்டும். சிறையில் இருக்கும் சக கைதிகள்தான் என்னை குளிக்க வைத்து தலையை துவட்டிவிட்டு நிறைய உதவிகளை செய்திருந்தனர் என்றார் வாசன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications