"ஒரே மேடையில் ஓபிஎஸ்- டிடிவி தினகரன்.." கொடநாடு சம்பவம்.. தேனியில் மாபெரும் ஆர்பாரட்டம்
சென்னை: கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்யக் கோரி டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைந்து தேனியில் மிக பெரிய ஆர்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்தவர் ஜெயலலிதா.. இவர் அவ்வப்போது நீலகிரியில் அமைந்துள்ள கொடநாடு பங்களாவுக்கு சென்று ஓய்வெடுப்பார். அவருக்குச் சொந்தமான பங்களா அங்கே இருந்தது.

முதல்வராக இருந்த போதும், எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் இங்குள்ள தனது பங்களாவில் ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் கடந்த 2016இல் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு யாரும் அங்குப் பெரிதாகச் செல்லவில்லை.
இந்தச் சூழலில் கடந்த 2017இல் அங்கே கொடநாடு பங்களாவில் மோசமான சம்பவங்கள் நடந்தன. அப்போது அங்கே காவலாளியாக பணிபுரிந்த ஓம் பகதூர் என்பவர் முதலில் படுகொலை செய்யப்பட்டார்.
மேலும், பங்களாவில் இருந்த பல முக்கிய பொருட்களும் கூட கொள்ளையடிக்கப்பட்டது.. இந்தச் சம்பவம் அப்போது மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வருக்குச் சொந்தமான இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் என மொத்தம் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. அதன் பின்னர் அங்குப் பல மர்ம சம்பவங்கள் நடந்தன. இதில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதற்கிடையே கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து ஆர்பாட்டம் நடத்தினர். தேனியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றாக கலந்து கொண்டனர்.
அதேபோல அனைத்து மாவட்டங்களிலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தேனியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கொடநாடு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications