ஆச்சு 6 வருஷம்! அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ரெடியாவோம்..அமமுக தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் அழைப்பு
அமமுகவினர் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்கிறார் டிடிவி தினகரன்.
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 6-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கை: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட கழகம், துரோகத்தின் கையில் சிக்குண்ட காரணத்தால் வீருகொண்டெழுந்த லட்சக்கணக்கான தொண்டர்களின் எழுச்சிமிகு எண்ணத்தின் வெளிப்பாடே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் நின்று தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்தல், தமிழகத்திற்கான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு இதயதெய்வம் அம்மா அவர்களின் பெயரில் "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்", கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் லட்சோப லட்சம் அன்பு தொண்டர்கள் மத்தியில் தொடங்கப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பலமே அதன் தீரமும், வீரமும் நிறைந்த தொண்டர்கள்தான் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நமது அரசியல் பயணத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நம்முடன் பயணித்த எனது அன்பு சகோதரர்களான மேலூர் சாமியையும், செயல் வீரரான வெற்றிவேல் உள்ளிட்ட பலரை இழந்திருக்கிறோம், கொள்கைப் பிடிப்புக்கொண்ட அவர்களின் எண்ணமும், தியாகச் செயலும் ஒருபோதும் வீணாகாது.
தொண்டர்களின் பேராதரவுடன்தான் பல களங்களைச் சந்தித்தோம். ஆர்.கே.நகரில் ஆண்ட கட்சியையும், ஆளுங்கட்சியையும் வீழ்த்தினோம். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றோம். ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் சிறப்புக்குரிய வெற்றிகளை நாம் ஈட்டினோம். தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ஆண்ட கட்சியையும், ஆளும் கட்சியையும் எதிர்த்து பல போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தியுள்ளோம்.
தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனிமுத்திரை பதித்து வரும் நிலையில், நாம் 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். துரோகிகளின் ஆட்சியிலும், தற்போது தீயவர்களின் ஆட்சியிலும் அனைத்துத் தரப்பு மக்களும் சொல்லெண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். தற்போது தீயவர்களின் ஆட்சியில் அச்சுறுத்தப்படும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எப்போதும் நாம் பாதுகாப்பாக இருந்திடவேண்டும். மேலும், ஏழை, எளிய மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் குறைவின்றி கிடைக்கவும் அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதிலும், தேவையெனில் மக்களுக்காக களம் இறங்கி போராட்டங்களிலும் ஈடுபட வேண்டும். சகோதர நேசத்தையும், மத நல்லிணக்கத்தையும் நம் தலைவர்களின் வழி நின்று என்றும் முன்னெடுத்திடுவோம்.

வரவிருக்கின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகளை நிர்வாகிகள் இப்போதில் இருந்தே தொடங்க வேண்டும். தமிழகம் மீட்க வேண்டிய உரிமைகளையும், மத்திய அரசிடமிருந்து பெறவேண்டிய நலன்களையும், மாநில உரிமைகளையும் பெற்றிட, அம்மாவின் உண்மையான தொண்டர்களின் இயக்கமான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தால்தான் முடியும் என்ற நமது பரப்புரையை நாம் மேற்கொள்ளவேண்டும்.
5 ஆண்டுகள் என்பது நமது கட்சிக்கான வயதாக இருந்தாலும், நமக்கு அரசியல் கற்றுக் கொடுத்து, நம்மை பயிற்றுவித்தவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் என்பதை நாம் நினைவில்கொண்டு தமிழக அரசியல் களத்தில் பயணித்திடுவோம்.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கழகம், அம்மா அவர்கள் கொடுத்துச்சென்ற ஆட்சி அதிகாரத்தை இழந்து, தொடர்ந்து பலவீனப்பட்டு வருவதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் துரோக சக்தியின் கூட்டம் வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ள தீயசக்திகளிடம் சமரசம் அடைவது கண்கூடாக தெரிகிறது. துரோகிகளும், தீயசக்திகளும் வீழ்த்தபடவேண்டும் என்பதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியோடு இருக்கிறது. அதேசமயத்தில், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியாய் நின்று போராட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். தீயசக்தி தி.மு.கவை வீழ்த்தியே ஆகவேண்டும். தமிழக மக்கள் நலனுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் நாம் எப்போதும் பாடுபடவேண்டும். மாண்புமிகு அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைக்கவேண்டும், இதனை நிறைவேற்றியே தீருவோம் என்பதே நமது இயக்கத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழாவில் நாம் எடுக்கும் உறுதிமொழியாகும். கழகத்தின் 6ம் ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியினை ஏற்றியும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புரிந்தும், மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கியும் கழக ஆண்டுவிழாவினை சிறப்போடு கொண்டிட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சோதனைகளும், சவால்களும் நமது பயணத்தை ஒரு போதும் தடுத்திட முடியாது. "எதிர்காலம் வரும், நம் கடமை வரும்". இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications