இலாகா மாத்திட்டா புனிதராகிடுவாரா ராஜ கண்ணப்பன்? இதுதான் திராவிட மாடலா?.. டிடிவி தினகரன் நறுக்!
சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றிவிட்டால் அவர் புனிதராகிவிடுவாரா? இதுதான் முதல்வர் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதியின் பெயரை சொல்லி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் திட்டியதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார்.
ஜாதியின் பெயரை சொல்லி திட்டிய ராஜகண்ணப்பனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமல் இலாகா மாற்றி கொடுப்பது ஒரு தண்டனை என கேள்வி எழுந்துள்ளது. இதே கேள்வியை டிடிவி தினகரனும் எழுப்பியுள்ளார்.

டிடிவி தினகரன்
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் திரு.ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? 'எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா?

சாதிய வன்மம்
சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் திரு.ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்?

இந்தியா
ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா? என டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது ட்வீட்டை முதல்வரின் ட்விட்டர் பக்கத்திற்கு டேக் செய்துள்ளார்.

அமைச்சர் பதவி
ஜாதியை பற்றி பேசிய ஒருவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜாதி பெயரை சொல்லி திட்டியது மட்டுமல்லாமல் அவர் மீது சில குற்றச்சாட்டுகளும் இருக்கும் நிலையில் எதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டும் என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications