Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 தொகுதிகளில் அதிமுக வெற்றிக்கு ஆபத்து? ஷாக் தந்த டிடிவி தினகரன்! குஷியில் திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரனின் அமமுக -பாஜக கூட்டணி குறைந்தது 10 தொகுதிகளில் அதிமுக வெற்றியைப் பாதிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் களத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்து தெம்பாக இருக்கிறது திமுக கூட்டணி. அடுத்ததாக எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் தெரியவில்லை.

TTV Dhinakaran can prevent AIADMK victory in 10 constituencies

'அதிமுக தலைமையில் வெற்றிக் கூட்டணி' அமைப்போம் என்று நாளைக்கு மூன்றுவேளை பிரஸ் மீட் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அந்த வெற்றிக் கூட்டணி என்பது என்ன? என்பது இதுவரை பிடிபடாத விசயமாக உள்ளது.

அதிமுக கூட்டணிக்காகக் கதவு மற்றும் ஜன்னலை திறந்து வைத்துக் காத்திருந்த பாஜக, இனி வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்து அதிமுகவுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. அதில் முதல் நபராக டிடிவி தினகரன் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி உள்ளார்.

அரசியல் களத்தில் அதிமுகவின் தலைமையைக் கைப்பற்றும் யுத்தத்தில் முன்வரிசையில் நின்றவர் டிடிவி தினகரன். அதிமுகவிலிருந்து அவரை நீக்கிய பிறகு தமிழகம் முழுவதும் அவருக்கு ஆதரவான ஒரு நிலை நீடித்தது.

TTV Dhinakaran can prevent AIADMK victory in 10 constituencies

சொல்லப் போனால் பல தொகுதிகளில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தைவிட அதிக வாக்குகளை அமமுக வேட்பாளர்கள் பெற்றிருந்தனர். சில தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அதிமுக வெற்றிக்கு ஆப்பு வைத்திருந்தனர் என்பதே உண்மை.

டிடிவி தினகரனின் பிரிவால் அதிமுக கடந்த மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. அமமுக பெற்ற வாக்குகள் அதிமுகவுக்குச் சென்றிருந்தால், பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் சிலர் வென்றிருப்பார்கள். ஆனால், அது நடக்காமல் தடையாக இருந்தது அமமுக.

இந்த முறை அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியால் அதிக லாபம் அடையப் போவது என்னவோ திமுகதான். மிகச் சர்வசாதாரணமாக 10 தொகுதிகளில் திமுக வெல்வதற்காக வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

TTV Dhinakaran can prevent AIADMK victory in 10 constituencies

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் சார்பாக திமுக கூட்டணியில் போட்டியிட்டார். அவர் 5,66,104 வாக்குகளைப் பெற்றார். ஏறத்தாழ 52.2% வாக்குகள்.
இவரை எதிர்த்து பாஜக சார்பாக ஹெச். ராஜா போட்டியிட்டார். அவர் 2,33,860 வாக்குகளைப் பெற்றார். இந்தத் தொகுதியில் பாஜக பெரிய பலமான கட்சி இல்லை. அதிமுக கூட்டணி பலத்தால் இந்தளவுக்கு வாக்குகளைப் பெற்றார் ராஜா. சுமார் 21.56% வாக்குகள்.

ராஜா பெற்ற வாக்குகளில் சரிபாதி அளவு வாக்குகளை அமமுக வேட்பாளர் வி. பாண்டி பெற்றார். அதாவது 1,22,534 வாக்குகள். அமமுக 1 லட்சம் வாக்குகளைப் பெற்ற தொகுதிகளில் சிவகங்கையும் ஒன்று. அதாவது 11.3% வாக்குகள்.

இந்தத் தொகுதியில் ஒருவேளை அதிமுக கூட்டணியில் அமமுக இடம் பெற்றிருந்தால், வாக்குகள் சிதறாமல் இருந்திருக்கும். கார்த்திக் சிதம்பரத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய சவாலை இந்தக் கூட்டணி விடுத்திருக்கும்.

TTV Dhinakaran can prevent AIADMK victory in 10 constituencies

ஆனால், அது நடக்கவில்லை. காரணம் ஓட்டுப் பிரிந்ததுதான். ஆகவே, இந்த முறையும் பாஜக உடன் சேர்ந்து ஓட்டுகளைப் பிரிப்பார் டிடிவி தினகரன். அதனால் அதிமுக தோல்வியைச் சந்திக்கும். திமுக ஈசியாக வெற்றி பெற வாய்ப்பை அது உருவாக்கும்.

அடுத்ததாக அமமுக தன் பலத்தைக் கடந்த மக்களவைத் தேர்தலில் நிரூபித்த தொகுதி விருதுநகர். அமமுக வேட்பாளர் எஸ். பரமசிவ ஐயப்பன் 1,07,615 வாக்குகளைப் பெற்றார். இது மநீம மற்றும் நாதகவைவிட அதிகம்.

அதாவது அடுத்த முதல்வர் கனவிலிருந்த கமல்ஹாசன், சீமானைவிட சைலண்ட்டாக இவ்வளவு வாக்குகளை டிடிவி தினகரன் கட்சி வேட்பாளர் பெற்றிருந்தார். 10.01% வாக்குகள் என்பது எளிமையான விசயம் இல்லை.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக நின்ற மாணிக்கம் தாகூர் 4,70,883 வாக்குகளைப் பெற்று, 43.81% அளவுக்கு பலத்தைப் பதிவு செய்தார்.

TTV Dhinakaran can prevent AIADMK victory in 10 constituencies

இதில் இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். இந்த தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அழகர்சாமி கிட்டத்தட்ட 3,16,329 பெற்று அதிர்ச்சியைக் கொடுத்தார். 29.43% வாக்குகள்.
அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்து நின்றிருந்தால், காங்கிரஸ் வேட்பாளர் படுதோல்வியைச் சந்தித்து இருப்பார். கட்டாயம் அதிமுகவுக்குக் கூடுதலாக ஒரு எம்பி கிடைத்திருப்பார். அதிமுகவை மண்ணைக் கவ்வ வைத்தது டிடிவி தினகரனின் பிரிவு.

இந்த முறை அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. பாஜக கூட்டணிக்குள் அமமுக போய் உள்ளது. இதனால் அதிமுகவுக்குப் பெரிய நஷ்டம். பாஜகவுக்கும் சுமாரான லாபம்.

ஆனால் திமுகவுக்கு மிகப் பெரிய லாபமாக அமைந்துள்ளது. இதனால் அதிமுக இந்த முறையும் இந்தத் தொகுதியைக் கைகழுவக் கூடும் என்பதே அரசியல் கணக்காக உள்ளது.

TTV Dhinakaran can prevent AIADMK victory in 10 constituencies

அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கும் தொகுதிகளின் பட்டியலில் திருச்சியும் உள்ளது.

இந்த முறை இங்கே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் போட்டியிடுவார் என்று பேசப்பட்டது. ஆனால், அவர் வழக்கம் போல் வயநாடு போய்விட்டார்.

திருநாவுக்கரசுக்கு தொகுதிக்குள் பெரிய அளவில் ஆதரவு இல்லை. கடந்த முறை சு. திருநாவுக்கரசர் 6,21,285 பெற்றிருந்தார். காங்கிரஸ் கட்சி மிக அதிக வாக்குகளைப் பெற்ற தொகுதிகளில் திருச்சியும் ஒன்று. 59.28% வாக்குகளை திமுக கூட்டணி பெற்றது.

அதைவிடப் பெரிய அளவில் கூட்டணி பலம் இல்லாமல் நின்ற தேமுதிக வேட்பாளர் மருத்துவர் வி.இளங்கோவன், 1,61,999 ஓட்டுகளை வாங்கினார். 15.46% வாக்குகள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை தேமுதிக பெற்ற தொகுதிகளில் திருச்சியும் ஒன்று என்பது கூர்ந்து பார்க்க வேண்டிய விசயம்.

TTV Dhinakaran can prevent AIADMK victory in 10 constituencies

தேமுதிகவுக்கு இணையாக அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் 1,00,818 வாக்குகளைப் பெற்றார். இது 9.62%. இவர் திருச்சியில் செல்வாக்கு மிக்க வேட்பாளர். அமமுகவும் அதிமுக கூட்டணியிலிருந்திருந்தால் கட்டாயம் சில மாற்றங்களைக் கொடுத்திருக்கக் கூடும்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றிக் கனியைப் பறித்த ஒரே தொகுதி தேனி மட்டும்தான் . அதற்குக் காரணம், ஒபிஎஸ் மகன் இரவீந்திரநாத் குமார் முதன்முதலாகத் தேர்தல் களத்தில் குதித்து. அவர் 5,04,813 வாக்குகளைப் பெற்றார். ஆனாலும் அவரது வெற்றி நீதிமன்றம் வரை சென்று இழுபறியில் ஊசலாடியது. அவர் பெற்றது 43.02% வாக்குகள்.

இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங் வேட்பாளர் இளங்கோவனை வீழ்த்தினார். இளங்கோவன் 4,28,120 வாக்குகளைப் பெற்று 36.48% ஐ பதிய வைத்தார்.

இந்தத் தொகுதியில் அமமுக செல்வாக்குப் பெற்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார். 12.28% வாக்குகள். இது அதிமுகவுக்குப் போக வேண்டிய வாக்குகள். டிடிவி தினகரன் பிரிவால் அதிமுக இழக்க வேண்டி வந்தது.

இந்த முறையும் தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடலாம் என்கிறார்கள். அவர் குக்கர் சின்னத்தில் நிற்பதற்காக வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

TTV Dhinakaran can prevent AIADMK victory in 10 constituencies

ஆனால், வெற்றி கிடைக்குமா என்பது உறுதியாகச் சொல்ல முடியாது. பாஜக கூட்டணி இல்லாமல் அவர் நின்றிருந்தால், சில ஆதாயங்கள் கிடைத்திருக்கும். அவர் பாஜக பக்கம் போனதால், திரும்பவும் அது திமுகவுக்கு இலாபமாக மாறியுள்ளது. அதிமுகவுக்கு அடியாக மாறி இருக்கிறது.

டிடிவி தினகரன் பிரிவால் அதிமுக அடிவாங்கப் போகும் பட்டியலில் மதுரை, சிதம்பரம், தர்மபுரி, தஞ்சாவூர், தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

டெல்டா மாவட்டங்களில் டிடிவி தினகரனின் குடும்பத்திற்குச் செல்வாக்கு மிதமாக உள்ளது. அதைப்போல ராமநாதபுரம், தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக செல்வாக்கு அதிகமாக உள்ளது. அதிமுகவுக்கு இணையாக இல்லை என்றாலும், அதிமுகவின் வெற்றியைத் தடுக்கும் அளவுக்கு உள்ளது என்று சொல்லலாம்.

TTV Dhinakaran can prevent AIADMK victory in 10 constituencies

ஆக, எப்படிப் பார்த்தாலும் இந்தத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை 10 தொகுதிகளில் டிடிவி தினகரன் பாதிக்க வைப்பார். எடப்பாடி பழனிசாமியின் வெற்றியைத் தடுப்பதன் மூலம், அவர் அதிமுகவின் வாக்கையும் உடைப்பார். அப்படிப் பார்த்தால் டிடிவி தினகரனின் புண்ணியத்தில் திமுக 10 தொகுதிகளில் மிக எளிதாக வெல்லும் எனப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+