Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமமுக துணை பொதுச் செயலாளர் மாணிக்க ராஜா நீக்கம்! தென் மாவட்டங்களில் பிரபலமானவர்! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமமுகவின் (AMMK) துணை பொதுச் செயலாளராக இருக்கும் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜாவை அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.

AMMK

இதுகுறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரனான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்". இவ்வாறு தெரிவித்துள்ளார்.

AMMK

தமிழக சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். ஆனால் அவர் தனக்கு துரோகம் செய்துவிட்டதால் அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என கூறியிருந்த தினகரன், கடந்த ஆண்டு என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

அதிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று தவெக, அதிமுக கூட்டணியில் இணைந்தால் அது தற்கொலைக்குச் சமம் என்று விஜய்க்கு அறிவுறுத்தியிருந்தார் தினகரன். அப்படிப்பட்ட அவர் தற்போது தானே, என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார்.

அமமுகவினரிடையே அதிருப்தி

இது அமமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என பல நிர்வாகிகள் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

அமமுக தினகரன் கேட்கவில்லை

ஆனால் அதை தினகரன் காது கொடுத்து கேட்கவில்லையாம். இதனால் பலர் கட்சி மாறும் முடிவில் இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் டிடிவி தினகரனின் 25 ஆண்டுகால நண்பரான மாணிக்கராஜா, தென் மாவட்டங்களில் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.

கோவில்பட்டி தொகுதி

அது போல் டிடிவி தினகரன் வலதுகரமாக இருந்தார். 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது கோவில்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் தினகரன் போட்டியிட்ட போதசு மாணிக்கராஜா கடுமையாக உழைத்தார்.

திமுகவில் இணைந்தார் மாணிக்கராஜா

இந்த நிலையில் அவர் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து திமுகவில் இணைந்தார். அப்போது அவருடன் அமமுகவை சேர்ந்த 3 மாவட்டச் செயலாளர்களும் இணைந்தனர்.

என்டிஏ கூட்டணியில் இணைய பிடிக்கவில்லை

இந்த இணைப்புக்கு பிறகு, மாணிக்கராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு தொண்டர்களும் நிர்வாகிகளும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் எதிர்ப்பு தெரிவித்தோம்.

தினகரனிடம் எடுத்துரைத்தும் கேட்கவில்லை

ஆனால் அவர் எங்களது பேச்சை கேட்கவில்லை. அது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது நமக்கு ஆபத்து என பலமுறை அவரிடம் எடுத்துக் கூறியும் அமமுக கட்சியை எதற்கு ஆரம்பித்தோம் என்பதை மறந்து இந்த முடிவை தினகரன் எடுத்துள்ளார்.

ஸ்டாலின் நல்லாட்சி

இதனால் எனக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணிக்க விருப்பமில்லை, எனவே நல்லாட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நான் திமுகவில் இணைந்தேன். என்னுடன் 3 மாவட்டச் செயலாளர்களும் இணைந்துள்ளனர். தினகரன் எதனடிப்படையில் என்டிஏ கூட்டணியில் இணைந்தார் என்பது எங்களுக்கு தெரியாது என மாணிக்கராஜா தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+