ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தீங்களே? ஜெயக்குமார் வழக்கு என்னாச்சு? - ஸ்டாலினை சீண்டும் டிடிவி!
சென்னை : எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை மௌனம் காப்பது ஏன்? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மீன்வளத்துறை சார்பாக வாக்கி டாக்கி வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது.
இந்நிலையில், தி.மு.கவும் முதல்வர் ஸ்டாலினும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றத்தான் ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தார்களோ? என்றும் சந்தேகம் கிளப்பியுள்ளார் டிடிவி.தினகரன்.

அதிமுக ஆட்சியில்
கடந்த அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் 37 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மீனவர்களின் நலனை பாதுகாப்பதற்காக, அதிநவீன வசதி கொண்ட வாக்கி டாக்கி வழங்க முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதில்தான் சுமார் 37 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டது.

மு.க.ஸ்டாலின்
அதிமுக ஊழல் தொடர்பாக அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டினார். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போதும் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி பேசி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 37 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் குற்றம்சாட்டி வந்தார்.

மதுரை ஐகோர்ட் கிளை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த ஊழல் வழக்கில் வேகம் காட்டப்படாத நிலையில், இந்த ஊழலை உடனடியாக விசாரணை செய்யக்கோரிய வழக்கில் அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, இதே புகாருடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் எத்தனை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன? பெறப்பட்ட மனுக்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்ற விவரத்தை தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்த பிறகு
இந்நிலையில், இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "பழனிசாமி கம்பெனியின் ஆட்சியில் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஓராண்டுக்கு மேலாக மௌனம் காப்பது ஏன்?
Recommended Video

ஊழல் ஒழிப்பு வேஷம்
இது தொடர்பாக புகார் அளித்தவர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய பிறகும் லஞ்ச ஒழிப்புத்துறை மழுப்பலான பதிலை தெரிவித்திருப்பது ஏன்? அப்படியென்றால் தி.மு.கவும் முதலமைச்சர் ஸ்டாலினும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றதான் ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தார்களோ? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார் டிடிவி.தினகரன்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications