யு-டர்ன் அடித்த டிடிவி தினகரன்! டெல்லியிலிருந்து வந்த போன் கால்! விஜய்யை டீலில் விட காரணம் இதுதான்
சென்னை: அமமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக ஆவார்கள் என்று, டிடிவி தினகரன் கூறியிருந்தார். அப்படியெனில் விஜய்யின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற டீலிங்கை டிடிவி ஏற்றுக்கொண்டார்.. விஜய் உடன் விரைவில் கூட்டணி அமைப்பார் என்று பேசப்பட்டது. இப்படி இருக்கையில்தான் டெல்லியிலிருந்து வந்த முக்கிய போன் கால் மற்றும் அதனை ஒட்டி நடந்த அரசியல் நிகழ்வுகளை தொடர்ந்து தற்போது, என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார் டிடிவி தினகரன்.
விஜய் உடன் கூட்டணிக்கு ரெடியான அவர், ஏன் திடீரென பின் வாங்கினார்? எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த அவர், ஏன் மீண்டும் அவர் தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்தார் என்பதற்கான விளக்கங்கள் வெளியாகியுள்ளன.

டிடிவி பேசியது என்ன?
"தேர்தல் நேரத்தில் எதிரி யார்? துரோகி யார்? நண்பன் யார்? என்றெல்லாம் என் கண்ணுக்கு தெரியாது. தமிழ்நாட்டின் நலனுக்கு, யாருடன் கூட்டணி வைத்தால் சரியாக இருக்குமோ.. அவர்களுடன் கூட்டணி வைப்போம். கவுரவமான இடங்களைப் பெற்று கூட்டணி அமைப்போம். அமமுகவினர் உறுதியாக அமைச்சர்களாக இடம் பெறுவீர்கள். நான் யாருடனும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். நான் கை காட்டுபவரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார். கவுரவமான இடம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி" என்று பேசியிருந்தார் டிடிவி.
அதிமுகவோ, திமுகவோ ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற டிமாண்டை ஏற்கவில்லை. தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே இப்படியான வாக்குறுதியை கொடுத்திருந்தது. எனவே டிடிவி நிச்சயம் அங்குதான் போவார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.
டெல்லியிலிருந்து போன் கால்
இப்படி இருக்கையில்தான் டெல்லியிலிருந்து, என்டிஏ கூட்டணி குறித்து போன் கால்கள் வந்ததாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் டிடிவி மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் மத்திய விசாரணை அமைப்புகள் மீண்டு தூசி தட்ட தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. இங்குதான் டிடிவி ஜர்க் ஆகியுள்ளார். ஏனெனில், இரட்டை இலை சின்னம் பெற ரூ.50 கோடி லஞ்சமாக கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிந்திருந்தது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
டிடிவி மீதான வழக்குகள்
அதேபோல, அந்நியச் செலாவணி மோசடி வழக்கிலும் டிடிவிக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. இந்த வழக்கு கொஞ்சம் பழசுதான். பிரிட்டனை சேர்ந்த நிறுவனத்திடமிருந்து சட்டவிரோதமாக அந்நிய செலாவணி பெற்றதாகவும், வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக டெபாசிட் செய்ததாகவும், 1996ல் அமலாக்கத்துறை சார்பில் டிடிவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அடுத்தடுத்த விசாரணை
இந்த வழக்கில் ரூ.28-31 கோடி வரை டிடிவி அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை செலுத்தவில்லை. எனவே அவரை திவாலானவர் என அறிவிக்க கோரி, அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறது. 2024-2025ம் ஆண்டில் அபராதத்தை வசூல் செய்யவில்லை என்று அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இப்படியான வழக்குகளில் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் நகர இருந்தனர். இப்படி இருக்கையில்தான் என்டிஏ உடன் கூட்டணி என்று டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார்.
கூட்டணியில் ஐக்கியம்
இந்த இரண்டு வழக்குகள் தவிர, இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் தினகரன் பலமுறை ஆஜராகி விளக்கமளித்துள்ளார். இருப்பினும் வழக்கு இன்னும் முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications