Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படியே வைகோ மாதிரி.. சட்டென ஜகா வாங்கிய டிடிவி தினகரன்! எல்லாம் எடப்பாடி மேல பயம் தான் காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று தினகரன் வெளிப்படையாக அறிவித்திருப்பது, அவரது ஆதரவாளர்களையும், 'அரசியல் எதிரிகளையும்' ஒருசேர ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முடிவுக்குப் பின்னால் என்ன அரசியல் கணக்கு இருக்கிறது? என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் மாவட்டங்களில் குறிப்பாக முக்குலத்தோர் சமூகத்தில் கணிசமான செல்வாக்கு கொண்டவராகக் கருதப்படும் தினகரன், ஒருகாலத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கடுமையாக விமர்சித்தவர்.

அந்த நிலைப்பாட்டின் காரணமாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அவர் விலகி நின்றார். அதன்பிறகு, அமமுக தனித்த பாதையில் பயணித்தது. ஆனால், அரசியல் சூழல் மாறிய நிலையில், பாஜக தரப்பில் இருந்து தினகரனை மீண்டும் என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பல கட்ட முயற்சிகள் நடந்தன.

TTV Dhinakaran aiadmk nda

டிடிவி தினகரன் யூடர்ன்

அந்த முயற்சிகளின் உச்சமாக, சமீபத்தில் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தினகரன் மேடையேறி, எடப்பாடி பழனிசாமியை "அண்ணன்" என்று அழைத்துப் பேசியது தமிழக அரசியலில் பெரிய திருப்பமாக பார்க்கப்பட்டது. இது தனிப்பட்ட பகை அல்ல, அண்ணன்-தம்பி இடையிலான கருத்து வேறுபாடு மட்டுமே என்றும், தமிழக மக்களின் நலனுக்காக மனப்பூர்வமாகவே என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். எந்தவித அழுத்தமும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், இதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கிப் பேசிய தினகரன், திடீரென எடுத்த இந்த யூடர்ன் அவரது அரசியல் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, ஓபிஎஸ் உள்ளிட்ட சில தலைவர்கள் தினகரனை நம்பி அரசியல் கணக்குகள் போட்டிருந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் அவர்களை டீலில் விட்டுவிட்டார் என்ற விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது.

அமமுக அரசியல்

இந்த சூழலில்தான், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தினகரன், "2026 சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளேன்" என்று தெளிவாக கூறினார். இதன்மூலம், அவர் சட்டசபை அரசியலில் இருந்து ஒருபடி விலகி நிற்பதைக் காட்டியுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாகவும் ஒரு ட்விஸ்ட் கொடுத்தார். தவெக தலைவர் செங்கோட்டையன் தன்னை பலமுறை அழைத்ததாக கூறிய தினகரன், அந்த அழைப்புகளை ஏற்கவில்லை என்றும், தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த உறுதியும் இல்லை என்றும் தெரிவித்தார்.

என்டிஏ

டிடிவி தினகரன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்ததற்குப் பின்னால், அமமுக ஆதரவாளர்களிடையே நிலவும் அதிருப்தியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. குறிப்பாக, என்டிஏ இணைப்புக்கு அமமுக அடிப்படைத் தொண்டர்களில் ஒரு பகுதி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும், தினகரனின் நெருங்கியவராக கருதப்பட்ட மாணிக்கராஜா அமமுகவை விட்டு விலகி திமுகவில் இணைந்தது, அவரது அமைப்பு பலவீனமடைந்து வருவதை வெளிப்படுத்தியது.

ராஜ்யசபா எம்பி பதவி

இந்தச் சூழலில், தேர்தலில் நேரடியாக போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறையும் என்ற கணக்கீடும் தினகரனின் முடிவுக்குப் பின்னால் இருக்கலாம் என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளன. இதற்கிடையே, அமித் ஷாவுடனான தினகரனின் சந்திப்புகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. அதிமுக-அமமுக இணைப்புக்கு அமித் ஷாவே முக்கிய காரணம் என்றும், இந்த இணைப்பு 2021-லேயே நடந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும் தினகரன் கூறியிருப்பது கவனம் பெறுகிறது. இதன் அடிப்படையில், என்டிஏ பேச்சுவார்த்தைகளின் போது தினகரன் ராஜ்யசபா எம்பி பதவியை கோரியிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுப்பெற்று வருகிறது.

அதிமுக அணிகள்

அதிமுகவை பொறுத்தவரை பல மாவட்டங்களில் நான்கு அணிகள் இருக்கின்றன. அதாவது எடப்பாடி பழனிச்சாமி அணி, ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள், டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள், ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என பல குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்த நிலையில் தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் தனக்கு எதிராக திரும்பி விடலாம் என்ற அச்சம் டிடிவி தினகரன் இருப்பதாக கூறப்படுகிறது.

வைகோ பாதையில் தினகரன்

மேலும் கடைசிவரை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தனக்கு எதிராக திரும்பவும் வாய்ப்பு உள்ளது என்பதால் தான் டிடிவி தினகரன் கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டார் என்கின்றனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்றை அமைத்த வைகோ வேட்புமனு தாக்கல் வரை சென்று விட்டு திடீர் என போட்டியில் இருந்து விலகினார். மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக என வைகோ சமாளித்தாலும், தோல்வி பயம் காரணமாகவே அவர் கடைசி நேரத்தில் கழன்று கொண்டார் என்ற விமர்சனமும் இருக்கிறது. இந்த நிலையில் வைகோ தேர்ந்தெடுத்த பாதையை தான் தினகரனும் தேர்ந்தெடுத்துள்ளார் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+