சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாட்டிக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்.. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பேசிய அவர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மாட்டிக்கொண்டு விழித்து வருகிறார் என கூறி பரபரப்பபை ஏற்படுத்தினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை துவங்கி பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் உள்ளார். இவர்
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அதிமுகவின் நிலவரம், தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடு, திமுக கூட்டணி கட்சிகள், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றி பேசினார். இதுபற்றி டிடிவி தினகரன் கூறியதாவது:

 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிச.7ஆம் தேதி தொடக்கம்.. முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிச.7ஆம் தேதி தொடக்கம்.. முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

 அதிமுக பலவீனம்

அதிமுக பலவீனம்

இரட்டை இலை சின்னம் இருப்பதால் தான் தொண்டர்கள் அதிமுக என ஒரு தரப்பினருடன் உள்ளனர். ஆனால் இரட்டை சிலை சின்னமே தற்போது சிக்கலில் உள்ளது. ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு ஒருவருக்கு சாதமாக வந்தாலும் கூட இரட்டை இலை சின்னத்தை வைத்து அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அந்த அளவுக்கு கட்சியை பலவீனப்படுத்தி விட்டார்கள்.

ஓரணியில் திரள வேண்டும்

ஓரணியில் திரள வேண்டும்

பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை உருவாக்கும் அளவுக்கு அதிமுகவில் கடந்த கால சம்பவங்கள் உள்ளன. குறிப்பிட்ட சிலரது நடவடிக்கைகள், அகம்பாவம், ஆணவமான பேச்சுகள், பணத்திமிரான பேச்சுகளை மக்கள் கவனித்து கொண்டு தான் வருகிறார்கள். இதனால் தான் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என நியாயமாக கூறி வருகிறேன். ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்'' என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி

இதையடுத்து 2024 நாடாளுமன்ற தேர்தல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் உடன் கூட்டணி பற்றிய கேள்வி எழுப்ப்பட்டது. இதற்கு டிடிவி தினகரன், ‛‛நாட்டுக்கு 2 பலமான கட்சிகள்(பாஜக, காங்கிரஸ்) இருந்தால் தான் ஜனநாயகத்துக்கு நல்லது. இன்னும் 6 முதல் 7 மாதங்களுக்கு பிறகு தான் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பரபரப்பு ஏற்படும். அடுத்த நவம்பர், டிசம்பரில் தான் கூட்டணி பற்றி பேச முடியும்'' என்றார்.

திமுக மீது அதிருப்தி

திமுக மீது அதிருப்தி

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது பற்றியும், திமுக தலைமையிலான தற்போதைய கூட்டணியின் செயல்பாடு பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிடிவி தினகரன், ‛‛திமுக தலைமையிலான கூட்டணி 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. திமுக ஆட்சி அதிகாரத்துக்கு வந்த ஒன்றரை ஆண்டில் மக்கள் அக்கட்சி மீது நிறைய அதிருப்தியில் உள்ளனர். இன்னும் போக போக அதிருப்தி என்பது அதிகரிக்கும்.

மாட்டிக்கொண்ட ஸ்டாலின்

மாட்டிக்கொண்ட ஸ்டாலின்

ஏனென்றால் தேர்தல் வேளையில் திமுக முடியாதவற்றையெல்லாம் செய்வோம் என தேவையின்றி சொல்லிவிட்டனர். தமிழ்நாட்டின் நிதிநிலைமை 2021ல் எப்படி இருந்தது. எத்தனை லட்சம் கோடி கடன் இருந்தது என்பது திமுகவுக்கும் தெரியும். அப்படி இருந்தாலும் கூட எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் மாட்டிக்கொண்டு விழித்து வருகிறது. இதுதான் உண்மை. சமாளிக்க வேண்டும் என்பதற்காக திராவிட மாடல் ஆட்சி என கூறி வருகிறார்கள். ஆட்சியில் இருப்பதால் திமுக புரோமோஷன் செய்து காலத்தை ஓட்டி வருகிறது. உண்மை நிலை என்ன? என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

பலமிழக்கும் திமுக கூட்டணி

பலமிழக்கும் திமுக கூட்டணி

இதனால் திமுக கூட்டணி என்பது தமிழகத்தில் பலமிழந்து வருகிறது. திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் மக்கள் ஆதரவு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். நாடாளுமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பதன் மூலம் திமுகவை வீழ்த்த முடியும். கூட்டணிக்கு நல்ல தலைவர் அமைவது முக்கியம். இருப்பினும் கூட்டணி என்ன என்பது பற்றி தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்ய முடியும். பலபேர் பலவிதமாக இருப்பதால் என் தலைமையில் கூட்டணி அமையும் என்பதை எல்லாம் ஏற்றுக்கவே முடியாது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்.

பழனிச்சாமி பெயரை குறிப்பிட்டு..

பழனிச்சாமி பெயரை குறிப்பிட்டு..


நான் இப்படி கூறுவதால் அந்த வேளையில், பழனிச்சாமியுடன் சேருவீர்களா? என கேட்பீர்கள். நான் ஒருபோதும் கட்டாயத்துக்க கட்டுப்பட மாட்டேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பது பற்றி நான் அனுமானம் செய்து வைத்துள்ளேன். அந்த அனுமானத்தின் அடிப்படையில் கூட்டணி அமையும் பட்சத்தில் கட்சி செயல்படும்'' என்றார்.

English summary
Amma Makkal Munnettra Kazhagam General Secretary TTV Dhinakaran met the press in Chennai. At this time, talking about the parliamentary election alliance, he created a sensation by saying that Tamil Nadu Chief Minister Mukh Stalin is waking up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X