நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாள தெரியவில்லை.. டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு
சென்னை: "2026 சட்டசபை தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றுதான் கூறினேன். விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறியதால் அவருடன் கூட்டணி என்பது தவறானது" என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், "பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசர முடிவு அல்ல. நிதானமாக எடுத்த முடிவு. கூட்டணி பற்றி டிசம்பரில் அறிவிப்பேன்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன.அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த அமமுக, அந்தக் கூட்டணியில் இருந்து இப்போது விலகுவதாக அறிவித்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தலின் போது நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டுமென்ற நோக்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருந்தோம். ஆனால், வரும் 2026-ல் நடைபெற இருப்பது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல். இது தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க கூடிய தேர்தல். இந்த தேர்தலில் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் ஒன்று திரண்டு சரியான முதல்வர் வேட்பாளரை தருவார்கள் என்று நாங்கள் பொறுமையுடன் காத்திருந்தோம்.
இந்த இயக்கம் தொடங்கப்பட்டதே ஒரு சிலரின் துரோகத்தை எதிர்த்துதான். அவர்கள் திருந்துவார்கள் அல்லது திருத்துவார்கள் என நம்பி இருந்தோம். ஆனால், அதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்பது புரிந்தது. அதனால் நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் . எங்களது அடுத்தகட்ட நகர்வு குறித்து டிசம்பர் மாதம் முடிவு செய்வோம்" தயவுசெய்து தமிழ் தெரிந்த ப்ரூஃப் ரீடர் வேண்டும்
இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். அப்போது அவர் பேசுகையில், "2026 சட்டசபை தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றுதான் கூறினேன். விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறியதால் அவருடன் கூட்டணி என்பது தவறானது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசர முடிவு அல்ல. நிதானமாக எடுத்த முடிவு. கூட்டணி பற்றி டிசம்பரில் அறிவிப்பேன். அதிமுகவை ஒருங்கிணைக்க அமித்ஷா முயற்சி செய்தார். அந்த முயற்சி கைகூடும் என்று காத்திருந்தோம், ஆனால் அது நடக்கவில்லை. நாங்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்தோம் என பாஜகவுக்கு தெரியும்." என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த வரை எல்லாம் சரியாக இருந்தது. நயினார் நாகேந்திரன் தான் ஓ. பன்னீர்செல்வம் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம். நாங்கள் வெளியேறுவதற்கு பாஜக, நயினார் காரணம் அல்ல. எங்களை ஒரு துக்கடா கட்சியாக பாஜக நினைத்தது.
அண்ணாமலை இங்கே தலைவராக இருந்தவரையில், எல்லாம் சரியாக இருந்தது. ஆனால், நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் சரியில்லை. பிரதமரை ஓபிஎஸ் சந்திக்க முடியாத விவகாரத்தில் நயினாரின் பதில் ஆணவத்தின் வெளிப்பாடு. கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications