இளைஞர்களின் எதிர்காலத்தில் அலட்சியம்? குரூப் 2 தேர்வை ரத்து பண்ணுங்க.. TNPSCக்கு வலுக்கும் எதிர்ப்பு
டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்துக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : டிஎன்பிஎஸ்சியின் அலட்சியமே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணம் என்றும், இப்போதைய குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு குளறுபடி இன்றி புதிய தேர்வு நடத்த வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில், சில குழப்பங்களால் தேர்வர்கள் அவதியுற்றனர்.
குளறுபடிகள் நடைபெற்ற இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மீண்டும் தேர்வை புதிதாக நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

குழப்பங்கள்
தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான முதன்மை தேர்வு நடைபெற்று வருகிறது. 5,446 பணியிடங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்வுக்கு சுமார் 186 இடங்களில் இருக்கக்கூடிய 280 தேர்வு மையங்களில் 51,071 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த நிலையில் சென்னையில் துரைப்பாக்கம், புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட சில தேர்வு மையங்களில் 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு சில குளறுபடிகளால் தாமதமாக தொடங்கியது.

டிஎன்பிஎஸ்சி விளக்கம்
வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாளில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக வினாத்தாள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அது சரி செய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இந்த கால தாமதத்தை ஈடு செய்யும் வகையில் மதியம் நடைபெறும் 2ஆம் தாள் தேர்வு 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

வலுக்கும் கோரிக்கை
இந்நிலையில், தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, திருப்பி வாங்கப்பட்டது, தேர்வு தொடங்க தாமதம் ஆகிய குழப்பங்களால் தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதால், இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் முறையாக தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து வலியுறுத்திய நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளார்.

தினகரன் வலியுறுத்தல்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், "டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் குளறுபடி என்ற செய்தி 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் தேர்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை தேர்வில் சென்னை, திருச்சி உள்ளிட்ட தேர்வு மையங்களில் பதிவெண் குளறுபடியால் தேர்வு தாமதமாக தொடங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

புதிதாக தேர்வு வையுங்கள்
தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அலட்சியமாக செயல்பட்டதே குளறுபடிக்கு காரணம் என தேர்வர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை எனும் எதிர்காலம் பாதிக்கப்படாதவாறு இப்போதைய குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு குளறுபடி இன்றி புதிய தேர்வு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications