‛‛பன்மடங்கு உயர்ந்த முத்திரை கட்டணம்’’.. உடனே திரும்ப பெற வேண்டும்.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னை: ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இதற்கான அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்தாண்டு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவு அடிப்படையில், பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக அரசு பலமடங்கு உயர்த்தியுள்ளது. இதற்கான திருத்தங்கள் கடந்த மே 3 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

"தத்தெடுத்தலுக்கு முத்திரைக் கட்டணமானது ரூ.100லிருந்து ரூ.1000ஆகவும், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைக் கட்டணம் ரூ.20 என்பது ரூ.200ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சங்கம் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.300 லிருந்து ஒவ்வொரு ரூ.10 லட்சத்துக்கும் ரூ.500 என்றும், கிரையபத்திரம் ரத்துக்கு ரூ.50 ஆக இருந்த கட்டணம் ரூ.1000 ஆகவும், நகல் பத்திரத்துக்கு ரூ.20 ஆக இருந்த கட்டணம் ரூ.100 ஆகவும், பிரதி எடுத்தலுக்கு ரூ.25 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருவர் தான் மற்றொருவரிடம் வாங்கிய சொத்தை அவருக்கே திருப்பியளிப்பதாக இருந்தால், அது கிரைய பத்திரமாக கருதப்பட்டு வழிகாட்டி மதிப்பில் 7 சதவீத கட்டணம், 2 சதவீதம் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதுரூ.1000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. சங்கத்துக்கான ஒப்பந்த பதிவுக்கு ரூ. 200 அல்லது ரூ.500 என இருந்த கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அல்லாத பாகப்பிரிவினைக்கு ஒவ்வொரு பாகத்துக்கும் 4 சதவீதம் என்பது, ஒவ்வொருபாகத்துக்குமான சந்தை மதிப்பில் 4 சதவீதம் என திருத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பாகப் பிரிவினை செய்யும்போது, அதில்ஒருவர் உயிருடன் இல்லாத பட்சத்தில் அவரது சட்டப்படியான வாரிசுகள், முன்பு குடும்பத்தினர் அல்லாதவராக கருதப்படுவர். ஆனால், தற்போது புதிய திருத்தத்தில், அந்த சட்டப்படியான வாரிசுகளும் குடும்ப அங்கத்தினராக கொண்டு வரப்பட்டுள்ளனர்" என தெரவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர பல்வேறு முத்திரை கட்டணங்களும் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கட்டண உயர்வுக்கான அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "பொதுமக்களை பாதிக்கும் முத்திரைக் கட்டணம் பன்மடங்கு உயர்வுக்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.
பத்திரப்பதிவுத்துறையின் மூலம் நடைபெறும் பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம், உடன்படிக்கை என அனைத்துவிதமான செயல்பாடுகளுக்குமான முத்திரைக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியிருக்கும் தமிழக அரசின் மக்கள் விரோதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
பால்விலை உயர்வில் தொடங்கி மின்சாரக் கட்டணம், சொத்துவரி, சாலைவரி, குடிநீர் வரி மற்றும் நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பை நேரடியாகவும், மறைமுகமாவும் உயர்த்திய திமுக அரசு, தற்போது முத்திரைக் கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்தியிருப்பது தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் நிதி மேலாண்மையை முறைப்படுத்துவதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், வரி மற்றும் கட்டண உயர்வு எனும் பெயரில் ஏழை, எளிய மக்களின் மீது கூடுதல் சுமைகளை ஏற்றி, அதன் மூலமாக மட்டுமே வருவாயைப் பெருக்க முயற்சிப்பது திமுக அரசின் நிர்வாகத் திறனற்றத் தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் முத்திரைக் கட்டணம் பன்மடங்கு உயர்வுக்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மக்கள் மீது சுமையை ஏற்றாமல் அரசின் வருவாயை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications