மேகதாது அணை- காவிரி உரிமையை கடந்த காலம் போல கோட்டைவிடக் கூடாது- டி.டி.வி. தினகரன்
சென்னை: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதைத் தமிழக அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் கூறியுள்ளதாவது:
மேகேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணைக்கான கட்டுமானப் பணிகளை கர்நாடக அரசு தொடங்கியிருப்பதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன.மத்திய அரசின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இப்பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டிவிட்டால் காவிரியில் துளி தண்ணீர் கூட தமிழகத்திற்கு வராமல் போய்விடும். காவிரி டெல்டா பகுதி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முக்கால்வாசி பகுதிகள் குடிநீருக்காக காவிரி நீரை தான் நம்பி இருக்கின்றன.

ஏற்கனவே தி.மு.க ஆட்சிக் காலங்களில் தான் காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் தன்னுடைய உரிமையை கோட்டைவிட்டு நின்றது. இப்போதும் அப்படி நடந்து விடக்கூடாது
எனவே, தமிழகத்தின் ஆட்சி பொறுப்பு மட்டுமல்லாமல், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துள்ள தி.மு.க உடனடியாக செயல்பட்டு, மேகேதாட்டு அணை கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications