டிடிவி தினகரன் கடலூரை செலக்ட் செய்தது ஏன்? அமமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு!
சென்னை: கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜனவரி 17ஆம் தேதி டிடிவி தினகரன் மரியாதை செலுத்தவுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் அமமுக மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை தவிர்த்து டிடிவி தினகரன் கடலூரை செலக்ட் செய்த பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக தெரிவிக்கிறார் அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர். புதுச்சேரி பண்ணை வீட்டில் பொங்கல் கொண்டாடச் செல்லும் டிடிவி தினகரன், அங்கிருந்தவாறு கடலூருக்கு செல்ல வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஊரை செலக்ட் செய்தாராம். இதனிடையே இது பற்றி அமமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஏழைகளின் ஏந்தல், எளிய மக்களின் இதய நாயகர், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107வது பிறந்தநாள் வரும் 17.01.2024 புதன் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் காலை 10 மணியளவில் கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், 18.01.2024 முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளையொட்டி தெருமுனை பிரச்சார கூட்டங்களையும், ஏழை-எளியோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் மாவட்ட கழக செயலாளர்களுடன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை, வழக்கறிஞர் பிரிவு மற்றும் மருத்துவர் அணிகளின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து சிறப்புற நடத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications