மக்களவைத் தேர்தல் ப்ளான் என்ன? நாளை மறுநாள் அமமுக செயற்குழு! முக்கிய முடிவு எடுக்கும் தினகரன்!
சென்னை: நாளை மறுநாள் சென்னையில் அமமுக செயற்குழு கூட்டத்தை நடத்தவுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
ஓ.பன்னீர்செல்வத்துடனான சந்திப்புக்கு பிறகு இந்த செயற்குழு நடைபெறவுள்ளதால் அது குறித்தும் எதிர்கால கட்சியின் பாதை குறித்தும் விவாதிக்கலாம் எனத் தெரிகிறது.
அதேபோல் அமமுகவிலிருந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக என படையெடுத்து வருவதால், கட்சி மாறும் படலத்தை தடுத்த நிறுத்துவது பற்றியும் செயற்குழுவில் தினகரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை மாவட்டம் மேலூரில் மிக எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட அமமுக கட்சியானது முக்கியப் பிரமுகர்களின் விலகலால் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமமுக செயற்குழுவானது முதலில் ஜூன் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, தேதியை மாற்றி 20ஆம் தேதி நடைபெறும் என மறு அறிவிப்பு வெளியிட்டார். இதனிடையே அமமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றி நிர்வாகிகளுக்கு தினகரன் சில இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமமுக செயற்குழுவில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அழைப்பிதழ் இல்லையென்றால் உள்ளே அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த செயற்குழுவில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தினகரன் முக்கிய முடிவுகள் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications