ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுகவுக்கு போட்டியாக டிடிவி தினகரன் களமிறங்குகிறாரா?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. இவர் கடந்த மாதம் 4ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமாகிவிட்டார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
3 மாநில சட்டசபை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அது போல் திமுக கூட்டணியில் அதிமுகவே போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் கே.வி. ராமலிங்கம் அல்லது கே எஸ் தென்னரசு ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடுவர் என தெரிகிறது.

பாஜக போட்டியிடுவது
அது போல் பாஜக தனித்து போட்டியிடுகிறதா என தெரியவில்லை, அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடும் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ் தன் தரப்புக்கு போட்டி வேட்பாளரை நிறுத்துவாரா இல்லை போட்டி வேட்பாளரால் எதிர்க்கட்சிக்குத்தான் சாதகம் என கருதி இரட்டை இலை தோற்க விடாமல் போட்டி வேட்பாளரை களமிறக்கும் முடிவை கைவிடுவாரா என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி நிர்வாகிகளுடன் அமமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஜனவரி 27 இல் நல்ல செய்தி
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஜனவரி 27ஆம் தேதி நல்ல செய்தி சொல்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாக இருக்கிறது. இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.

இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான கூட போட்டியிடலாம். எனக்கு அந்த தைரியம் உள்ளது. தேர்த்லை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை. தனியாக் நின்று வெற்றி பெற்றுள்ளேன். மக்கள் நினைத்தால் எல்லாம் நடக்கும். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. இரட்டை இலையை மட்டுமே அதிமுகவினர் நம்பி உள்ளதாக தினகரன் கூறியுள்ளார்.
-
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications