Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நோட் பண்ணுங்கப்பா.. ராமதாஸை சீண்டி.. ஸ்டாலினை பாராட்டி.. பரபரக்கும் தினகரன் அறிக்கை!

சேலம் எட்டு வழிச்சாலை குறித்து டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இது என்ன புது சமாச்சாரமா இருக்கே.. எட்டு வழி சாலையில் டாக்டர் ராமதாஸ் அமைதியா இருக்கிறார் என்று டிடிவி தினகரன் ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனித்து சொல்லி இருக்கிறார்!

தமிழகத்துக்கு எட்டு வழிச்சாலை கொண்டு வந்தபோது, எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளுள் முக்கியமானது பாமக. மக்கள் போராட்டங்களிலும் பங்கு கொண்டது. ஏற்கனவே 3 தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும்போது, 4-வதாக எதற்கு சேலத்துக்கு இன்னொரு சாலை என கேள்வி எழுப்பியது.

இத்திட்டத்தினால் பாதிக்கப்படக்கூடிய 5 மாவட்ட விவசாயிகளையும் அன்புமணி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. கடைசியில் இந்த திட்டத்துக்கு சென்னை ஐகோர்ட் தடையும் விதித்தது. உண்மையிலேயே எட்டு வழிச்சாலைக்கு எதிராக குரல் கொடுத்தது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒரு பெண்தான்! அதன்பிறகுதான் மற்ற கட்சிகள் இதில் தலையிட ஆரம்பித்தன.

அன்புமணி

அன்புமணி

பாஜகவை கடுமையாக டாக்டர் ராமதாஸ் எதிர்த்து அறிக்கை விட்டபோதெல்லாம் பிரதானமாக சொன்னது இந்த எட்டுவழிச்சாலை திட்டத்தைதான். அதே சமயம் பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தவுடன், இந்த திட்டத்தில் பாமக என்ன மாதிரியான நிலைப்பாட்டினை எடுக்க போகிறது என்ற கேள்வியும் தமிழக மக்கள் மனதில் எழுந்தது. ஆனால் அன்புமணியோ, தமிழகத்துக்கு எதிரான திட்டங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம், கூட்டணியில் இருந்தாலும், கொள்கைகளை விட மாட்டோம்" என்று சொல்லி இருந்தார்.

எட்டு வழிச்சாலை

எட்டு வழிச்சாலை

இப்போது, இரண்டாவது முறையாக பாஜக, மத்தியில் பொறுப்பை ஏற்றுள்ளது. பழையபடி, தமிழகத்துக்கு எதிரான எட்டுவழிச்சாலை சம்பந்தமான விவகாரங்களையும் கிண்டி கிளற ஆரம்பித்துள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து சொல்லி வருகிறார்கள்.

அறிக்கை

அறிக்கை

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்"எட்டுவழிச் சாலைத்திட்டம் நல்ல திட்டம் என்று சட்டமன்றத்திலேயே முழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், இப்போதாவது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அத்திட்டத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். மகிழ்ச்சிதான்" என்று சொல்லி உள்ளார்.

மேல்முறையீடு

மேல்முறையீடு

மேலும், "இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்ட டாக்டர் ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது, எதற்காகவும் எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தார். இப்போது அவரது கூட்டணிக் கட்சியான பிஜேபி ஆளும் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கும் இந்த சூழலில் அவரது மௌனமும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

தயாராகி விட்டதோ?

தயாராகி விட்டதோ?

தினகரன் தெரிவித்துள்ள இந்த கருத்தின்படி 2 விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டி உள்ளது. முதலாவதாக, ராமதாஸ் அமைதியாக இருக்கிறார் என்கிறார். அதாவது பாமகவும் இந்த திட்டத்தை வரவேற்க தயாராகி விட்டதா, பாஜகவை எதிர்க்காமல் விட்டுவிடுமா என்ற ரேஞ்சுக்கு மக்களை யோசிக்க வைத்துள்ளார்.

சபாஷ்

சபாஷ்

அடுத்ததாக, ஸ்டாலினுக்கு ஒரு சபாஷ் சொல்லி உள்ளார். இது வெறும் பாராட்டா? அல்லது பாராட்டுக்கு பின்பு வேறு ஏதேனும் ஆட்சி கவிழ்ப்புக்கு கைகோர்க்கும் பிள்ளையார் சுழியா என தெரியவில்லையே... இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+