திருப்பரங்குன்றத்தில் எல்லா மதத்தினரும் ஒன்றாக உள்ளனர்.. இடையூறு பண்ணாதீங்க.. டிடிவி தினகரன் சுளீர்
சென்னை: திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்திற்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்த எந்த இயக்கம் நினைத்தாலும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கோவில் தீபாவம் சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. தமிழக அரசியலை இந்த விவகாரம் உலுக்கி உள்ளது. தவெக தவிர கிட்டத்தட்ட மற்ற எல்லா கட்சிகளும் இதில் தங்கள் நிலைப்பாடுகளை அறிவித்துவிட்டன.

திருப்பரங்குன்றம் மோதல்
திருப்பரங்குன்றம் மலைக்கோவிலின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதே தற்போதைய சர்சைக்கான முக்கியக் காரணம். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பும் இக்கோரிக்கையை உறுதிப்படுத்தியது. ஆனால் கோவில் நிர்வாகமும் மாநில அதிகாரிகளும் தீர்ப்பைச் செயல்படுத்தாததால், இந்து அமைப்புகளும் பா.ஜ.க. தோழமைக் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் வெடித்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) உட்பட பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டன. மத விவகாரத்தில் மத்தியப் படையின் இத்தலையீடு ஓர் அரிய நிகழ்வு.
கார்த்திகை அன்று திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார். இரண்டு முறை முறையிட்டும், அவமதிப்பு வழக்கு பதிவு செய்தும் கூட அரசு அங்கே விளக்கு ஏற்ற அனுமதிக்கவில்லை.
பாஜகவினர் மீது ஆக்சன்
இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர். இதையடுத்து நேற்று போலீசார் பாஜகவினர், இந்து முன்னணியினரை கைது செய்தனர். பாஜகவினர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் மீது வழக்கும் பதியப்பட்டு உள்ளது.
டிடிவி தினகரன் கருத்து
இந்த நிலையில்தான் திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்திற்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்த எந்த இயக்கம் நினைத்தாலும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் அமித்ஷாவை சந்திப்பதற்கான வாய்ப்பு உறுதியாக இல்லை.. என்னை அழைக்கவும் மாட்டார்கள். நானும் சந்திக்க மாட்டேன்.. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை என்டிஏ கூட்டணியில் அமமுக இணையாது. அதிமுகவை அமித்ஷா இயக்குகிறாரா என்று தெரியாது.
இந்த தேர்தலில் உறுதியாக துரோகத்தை வீழ்த்தப்படும். அதில் அமமுகவின் பங்கு நிச்சயம் இருக்கும். அமமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. கூட்டணி உறுதியான பின் வெளியில் சொல்வதுதான் மரியாதையாக இருக்கும். அதேபோல் திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அதற்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்று கூறி உள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து அவர் ஏற்கனவே வெளியேறிய நிலையில், இதை குறிப்பிட்டு உள்ளார். இதனால் அவர் இனியும் பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பே இல்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications