முன்பும், பின்பும் கூறாமல் நடுவில் கூறியதை மாத்திரம் திரித்து பரப்புவது கன்னியமல்ல.. குருமூர்த்தி
Recommended Video
சென்னை: நான் என்ன கூறினேன் என முழுமையாக கூறாமல் நடுவில் கூறியதை மட்டும் திரித்து பரப்புவது கன்னியமல்ல என குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேற்று ஓபிஎஸ் குறித்து ஒரு பரபரப்பு கருத்தை பேசியுள்ளார். அதில் நான் கூறியதாலேயே ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் அப்போது தியானம் மேற்கொண்டார். ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது, பிரிந்து கிடந்த அதிமுகவை நான்தான் ஒருங்கிணைத்தேன் என குருமூர்த்தி தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில் குருமூர்த்தியின் பேச்சு திமிர்வாதத்தின் உச்சம், இவ்வளவு திமிர் கூடாது; நாவடக்கம் தேவை. அதிமுகவின் மீது கைவைத்து வாங்கிக் கட்டிக் கொண்ட வரலாறும் குருமூர்த்திக்கு உண்டு என்றார்.
|
தனிப்பட்ட முறை
இதுகுறித்து குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். தொடர் ட்வீட்டுகளில் அவர் கூறுகையில் ஓ பி எஸ் சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை.

சசிகலா
ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை.
|
ஜெயலலிதா
இதை ஏற்கெனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரை ஏற்ற சசி எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். அதற்கு பதில் கூறும்போது ஓ பி எஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.
|
மரியாதை
எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கன்னியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து என கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications