டங்ஸ்டன் ரத்து விவகாரம்.. அரிட்டாப்பட்டி செல்லும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி.. அண்ணாமலை பலே பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டும் அதுதொடர்பான அரசியல் ஓயவில்லை. டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்ய நாங்கள் தான் காரணம் என்று மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு உரிமை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நாளை அரிட்டாப்பட்டி செல்ல உள்ளனர்.

மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி சுற்றுவட்டார பொது மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் மாநில அரசு மற்றும் அரசியல் கட்சிகள் மக்களுக்கு ஆதரவு நிலை எடுத்தனர்.

tungsten kishan reddy

இதையடுத்து மாநில அரசு அந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தியது. அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே மத்திய அரசு திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இது அந்த மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் மாறி மாறி உரிமை கோரி வரும் நிலையில், அது அந்த மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் அரிட்டப்பாட்டி சென்றிருந்தார். அங்கு உள்ளூர் மக்களுடன் உரையாடி வந்தார். இந்நிலையில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி நாளை அரிட்டாப்பட்டி வரவுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. முக்கியமாக சென்னை ஈசிஆர் சாலையில் பெண்களை காரில் விரட்டி சென்ற சம்பவம் மனதை பதைபதைக்க வைக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக சீர்கெட்டுள்ளது. அதற்கு ஈசிஆர் சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டு. ஈசிஆர் சாலையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அங்கு காவல்துறையின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். அதற்கு காவல்துறைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து தர வேண்டும். அந்தப் பகுதியில் காவல் நிலையங்களை அதிகப்படுத்தி வாகனங்களை வாங்கித் தர வேண்டும்.

பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் அதைத் தடுப்பதற்கு திமுக அரசு ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளி போடவில்லை. தமிழகத்துக்கு சுதந்திரமே கிடைக்காத அவலம் நிலவுகிறது.

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை பல அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுமென்றே அரசியலாக்குகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காரணத்தால் தான் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக. இதற்கு முன்பும் சட்டமன்றத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அது எல்லாம் நிறைவேறியிருக்கிறதா.

எனவே, டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம். நாளை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி சென்று விவசாயிகள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து உரையாட உள்ளோம்." என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+