மோதலுக்கு நடுவே..சென்னை மீனவர்களின் வலையை சேதப்படுத்திய துருக்கி சரக்கு கப்பல்.. என்ன நடந்தது?
சென்னை: நம் நாட்டுக்கும், துருக்கிக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் துருக்கி நாட்டின் சரக்கு கப்பல் சென்னை திருவொற்றியூர் மீனவர்களின் வலையை கடலில் சேதப்படுத்தி சென்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டுக்கும், துருக்கிக்கும் இடையேயான உறவு நன்றாக இல்லை. துருக்கி எப்போதும் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் தான் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானும், துருக்கியும் நட்பு நாடுகளாக உள்ளன.

சமீபத்தில் கூட நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் நம் நாடு ஏவுகணை மூலம் பாகிஸ்தானை தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு, துருக்கி உதவியது. இதனால் நம் நாட்டுக்கும், துருக்கிக்கும் இடையேயான உறவில் அதிக விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது சென்னை அருகே கடலில் தமிழக மீனவர்களின் வலைகளை துருக்கி சரக்கு கப்பல் சேதப்படுத்தி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் எழிலரசன். இவர் 5 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க பைபர் படகில் சென்றார். நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது துருக்கி நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் கடலில் பயணித்துள்ளது. இந்த கப்பல் பைபர் படகை மோதுவது போல் சென்றுள்ளது. இதனால் மீனவர்கள் பயந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த கப்பல், திருவொற்றியூர் மீனவர்களின் பைபர் படகின் மீது மோதவில்லை. மாறாக கடலில் மீனவர்கள் போட்டு இருந்த வலைகளை சேதப்படுத்தி சென்றது.
கடலில் வலை போடப்பட்டு இருப்பதாக மீனவர்கள் எச்சரிக்கை செய்தும் மூட துருக்கி சரக்கு கப்பலில் இருந்தவர்கள் கேட்கவில்லை. இதனால் மீனவர்கள் வலையை இழந்துள்ளனர். வலைகள் கிழிந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதையடுத்து கடலில் இருந்து வீடு திரும்பிய மீனவர்கள் சம்பவம் தொடர்பாக மீன்வளத்துறையில் புகார் செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications