தபால் நிலையத்தின் சூப்பர் சேமிப்பு திட்டம்.. 1 லட்சம் முதலீடு.. சில ஆண்டுகளில் 2 லட்சம் ரிட்டர்ன்!
சென்னை: மத்திய அரசு தபால் நிலையங்கள் மூலம் செயல்படுத்தி வரும் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களில் கிசான் விகாஸ் பத்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகள் தங்கள் கடின உழைப்பில் ஈட்டிய பணத்தை எந்தவித அச்சமுமின்றி முதலீடு செய்ய இது ஒரு பாதுகாப்பான இடமாக உள்ளது.. இதற்கு பல காரணங்கள் உள்ளன.. அவைகளை இங்கு சுருக்கமாக பார்ப்போம்..!!!
கிசான் விகாஸ் பத்திரம் திட்டமானது, சந்தை அபாயங்கள் எதுவுமே இல்லாமல் இந்திய அரசின் நேரடி உத்தரவாதத்துடன் கூடியது... அதனால்தான் இந்தத் திட்டம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது..

வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்கள் முதலீடு இரட்டிப்பாகும் காலம் அடிக்கடி மாறக்கூடியது.. தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை சரியாக 115 மாதங்களில் அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களில் இரண்டு மடங்காக உயர்கிறது..
கிசான் விகாஸ் பத்திரம்
உதாரணமாக நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை கிசான் விகாஸ் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் முதிர்வு கால முடிவில் எந்தவிதமான சிரமமுமின்றி 2 லட்ச ரூபாயாகத் திரும்பப் பெறலாம்.. தற்போது வழங்கப்பட்டு வரும் 7.5 சதவீத வட்டி விகிதம் என்பது மற்ற சேமிப்பு திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் லாபகரமானதாக உள்ளது..
குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாயில் இருந்தே யார் வேண்டுமானாலும் இந்த சேமிப்பை தொடங்க முடியும்.. அதிகபட்ச முதலீட்டுக்கு எந்தவிதமான உச்ச வரம்பும் இல்லை என்பது பெரும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கூடுதல் சாதகமாகும்.
1 லட்சம் முதலீடு - டபுள் மடங்கு லாபம்
இந்த திட்டத்தில் இணைவதற்கு 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் தகுதியானவர்கள்.. தனியாகவோ அல்லது 3 நபர்கள் வரை இணைந்தோ கூட்டுக்கணக்காகவும் இதனை தொடங்கலாம்.. மேலும் குழந்தைகளின் பெயரில் அவர்களின் பாதுகாவலர்கள் மூலமாகவும் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது..
அவசர காலங்களில் அல்லது எதிர்பாராத நிதி நெருக்கடியின் போது இந்தக் கிசான் விகாஸ் பத்திரத்தை ஒரு சொத்தாகக் கருதி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெறும் வசதியும் இதில் உள்ளது.. ஒருவேளை முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை திரும்ப பெற விரும்பினால் முதலீடு செய்த இரண்டரை வருடங்களுக்கு பிறகு சில நிபந்தனைகளுடன் பணத்தை எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ஒரு தபால் நிலையத்திலிருந்து இந்தியாவின் எந்த பகுதியியிலும், இன்னொரு தபால் நிலையத்திற்கும் உங்கள் அக்கவுண்ட்டை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும்.. அதேபோல் ஒரு நபர் தனது கணக்கை வேறொரு நபரின் பெயருக்கு மாற்ற விரும்பினாலும் அதற்கும் உரிய வழிமுறைகள் உள்ளன..
சூப்பர் சேமிப்பு திட்டம்
வட்டிக்கு வரி உண்டு என்றாலும் பங்கு சந்தை போன்ற சிக்கல்கள் ஏதுவுமே இதில் கிடையாது.. வருங்காலத் தேவைகளான குழந்தைகளின் உயர்கல்வி அல்லது திருமண செலவுகளுக்குத் திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு சூப்பரான நிதித் தீர்வு என்றே சொல்லலாம்.
அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த வசதி இருப்பதால் பொதுமக்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகி தங்கள் சேமிப்பை தொடங்கலாம்.. ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து மிக எளிதாக பணத்தை பெருக்க இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்..!!!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications