டெஸ்லா போட்டியாளர்.. தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டுகிறது வின்பாஸ்ட்.. ஆகா எவ்வளவு வேகம்! அசத்தல்
தூத்துக்குடி: வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் பிப்ரவரி 25ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளது.
சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம். இந்த நிலையில் அந்த நிறுவனம் அடிக்கல் நாட்ட உள்ளது.

டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.
இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் 1 பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம்: சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவை வின்பாஸ்ட் நிறுவனம் எடுத்துள்ளதாம்.
மீண்டும் வரும் ஃபோர்ட்: ஒரு வருடத்திற்கும் மேலாக கண்ணாமூச்சி விளையாடிய பிறகு, ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தைக்கு திரும்ப தயாராகி உள்ளது. மீண்டும் இந்திய சந்தையில் வருவதற்காக தங்களின் கார் மாடல் ஒன்றிற்கு காப்புரிமையை தாக்கல் செய்துள்ளது.
அதன் இந்திய பயணத்தை மீண்டும் தொடங்கும் என்பதைக் குறிக்கும் வகையில் இந்தியாவில் புதிய வேலை வாய்ப்புகளையும் பட்டியலிட்டுள்ளது. சென்னை போர்ட் ஆலையில் உற்பத்தியை மறுதொடக்கம் செய்யும் திட்டத்துடன் அந்த நிறுவனம் செயல்பாடுகளை முடுக்கி உள்ளது. சென்னை ஆலையின் விற்பனைக்காக JSW மற்றும் Vinfast உள்ளிட்ட நிறுவங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அந்த நிறுவனம் முறித்துள்ளது.
இதன் மூலம் சென்னையில் மீண்டும் முதலீடு செய்யும் திட்டத்தில் போர்ட் நிறுவனம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மீண்டும் இந்திய உற்பத்தி மார்கெட்டிற்கு போர்ட் நிறுவனம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. ஆனாலும் Ford நிறுவனம் சென்னையை விட்டு சென்றது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
தொழிற்சாலை மூடல்: தமிழ்நாட்டில் போர்ட் தொழிற்சாலை மூடப்பட்ட போது அந்த தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில், டாடா குழுமத்தின் தலைவர் . என்.சந்திரசேகரன் முதல்வரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் போர்ட் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே சிப் உற்பத்தி, செமி கண்டக்டர் உற்பத்தி, டாடாவின் பேட்டரி கார்கள் உற்பத்தி ஆலையை தொடங்குவது பற்றி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.. ஆனால் இந்த சந்திப்பு பெரிதாக பலன் அளிக்கவில்லை.
இதற்காக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த தொழிற்சாலையை வாங்குவதற்கான கடைசி கட்ட பேச்சுவார்த்தைகள் கூட நடைபெற்றன. ஆனால் கடைசியில் டாட்டா நிறுவனம் குஜராத்தில் இருக்கும் போர்ட் நிறுவனத்தை வாங்கிவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை மறைமலை நகரில் உள்ள போர்ட் ஆலை யாராலும் வாங்கப்படாமல் முடங்கியது. இதையடுத்து இந்த இடத்தை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்யவும் ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தைக்கு திரும்ப தயாராகி உள்ளது. மீண்டும் இந்திய சந்தையில் வருவதற்காக தங்களின் கார் மாடல் ஒன்றிற்கு காப்புரிமையை தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications