27 வயதில் மகள் இருக்க..7 மாத கர்ப்பமாக சீரியல் நடிகை அகிலா! தினமும் வளைகாப்பு.. ’பாப்பா’ ஹேப்பியாமே!
சென்னை: சின்னத்திரை தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது பல்வேறு சீரியல்களில் கலக்கி வருபவர் நடிகை அகிலா. தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தினம் தனக்கு வளைகாப்பு நடப்பதாகவும், இதனால் தானும் தனது குழந்தையும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு 27 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும், அவர் தான் மலர் சீரியலின் ஹீரோயின் எனக் கூறியிருக்கிறார். இதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மிக இளம் வயதிலேயே சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அகிலா. தொடர்ந்து அவரது திறமைக்காக பல சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது. முதன்முறையாக நடிகை ராதிகாவின் செல்வி சீரியலில் அறிமுகமானார்.
அதற்கு பிறகு முள்ளும் மலரும். அபூர்வ ராகங்கள், ரோஜா கூட்டம், கோலங்கள், திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள், கல்யாண பரிசு, சக்தி, அழகு என பல சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனது குடும்பம் குறித்த சில தகவல்களை பொதுவெளியில் முதன்முறையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார் அகிலா.

இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் ," 22 வயதாக இருக்கும் போதே நான் தொலைக்காட்சியில் அறிமுகம் ஆகிவிட்டேன். அப்போது சீரியல்கள், தொகுப்பாளினி என மிக பிஸியாக இருந்தேன். ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. நினைத்தது போலவே கடவுள் எனக்கு அந்த வரத்தை கொடுத்து விட்டார். நான் கர்ப்பமான நேரத்தில் நான் கமிட்டாகி இருந்த எல்லா சீரியல்களும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இப்போது எனது கர்ப்ப காலத்தை நான் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறேன்.
என்னை விட என்னை சுற்றி இருக்கும் என் நண்பர்கள் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒருவர் கர்ப்பமாக இருந்தால் ஒரு முறை தான் அவர்களுக்கு வளைகாப்பு நடக்கும். ஆனால் எனக்கு நாள்தோறும் வளைகாப்பு நடந்து வருகிறது. நான் கர்ப்பமாக இருப்பதை அவர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால் நானும் எனது வயிற்றில் இருக்கும் எனது பாப்பாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
அபியும் நானும் சீரியல் நடித்த போதே அந்த சீரியலின் டைரக்டர் எப்போ நீ என்னை தாய்மாமன் ஆக்குவ என கேட்டுக் கொண்டே இருந்தார். நான் ஐந்தாவது மாதமாக இருந்ததை தெரிந்து கொண்டு வளைகாப்பும் நடந்ததையும் தெரிந்து கொண்டார். நான் தான் முதலில் வளையல் போடலாம் என இருந்தேன். அதற்கு முன் யார் போட்டது என உரிமையோடு எனக்கு அவர் வளைகாப்பு நடத்தினார்.
இதே போல அபியும் நானும் சீரியலில் நடித்த முகிலின் அம்மா எனது வீட்டிற்கு வந்து வகை வகையாக சாதங்கள் செய்து கொடுத்து நலங்கு வைத்து வளைகாப்பு நடத்தினார். மேலும் 27 வயதில் ஒரு பொண்ணு இருக்கா.. அவள் பெயர் அஸ்வதி.. மலர் சீரியல் ஹீரோயின் அவள்தான். தற்போது அஸ்வதியும் அவளது நண்பர்களும் சேர்ந்து எனக்கு வளைகாப்பு நடத்தினார்கள். இதுவரை 40க்கும் மேற்பட்ட சீரியல்களில் ஹீரோயின், வில்லி, குணச்சித்திரம் என பல ரோல்களில் நடித்து இருக்கிறேன். இவ்வளவு நாளும் எனக்கு துணையாக இருந்தது எனது கணவர் தான்.
ஆனால் இதுவரை என் குடும்பத்தையோ. எனது கணவர் குறித்தோ நான் மீடியாக்களில் பேசியதும் இல்லை. அவர்களை காட்டியதும் இல்லை காரணம். என் குடும்பம் தான் எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம். நான் டாக்டராக வேண்டுமென ஆசைப்பட்டேன். முடியவில்லை. இதை அடுத்து என்னை பிஎச்டி படி டாக்டர் ஆகிவிடலாம் என உற்சாகப்படுத்தியது எனது கணவர் தான்" எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications