தூக்கில் தொங்கிய நடிகையின் கணவர்.. இந்த 2ம் தான் காரணமா.. அதிர்ச்சியில் சின்னத்திரை!

டிவி நடிகையின் கணவரின் தற்கொலை குறித்த விசாரணை நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையின் கணவனுக்கு கள்ளக்காதலும் இருந்துள்ளது.. கடன் பிரச்சனையும் இருந்துள்ளது.. மொத்த பிரச்சனையும் சேர்ந்து கழுத்தை நெரிக்க.. ஆபீஸ் ரூமிலேயே தூக்கில் தொங்கிவிட்டார்.

சென்னை பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத்.. 39 வயதாகிறது.. அண்ணாநகர், டிவிஎஸ் காலனியில் உள்ள தனியார் விளம்பர கம்பெனியில் மானேஜராக இருந்தவர்.

கிறிஸ்துமஸ் என்பதால் அன்றைய தினம் ஆபீஸ் லீவு விடப்பட்டிருந்தது.. லீவு முடிந்து நேற்று காலை ஆபிஸ் திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது ஆபீஸ் கதவு மூடப்படாமலேயே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, கோபிநாத் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அலறினர்.

விசாரணை

விசாரணை

இது சம்பந்தமாக ஜெஜெ நகர் போலீசுக்கு தகவல் சொல்லவும், விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் கோபிநாத் சீரியல் நடிகை ரேகா ஜெனீபரின் கணவர் என்பது தெரியவந்தது. இவர்கள் 10 வருடத்துக்கு முன்பு காதலித்து கல்யாணம் செய்தவர்கள்.. 2 மகன்கள் இருக்கிறார்கள்.. ரேகா ஜெனீபர் இப்போதும் சீரியல்களில் பிஸியாக நடித்து கொண்டுதான் இருக்கிறார்.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

கோபிநாத் தற்கொலைக்கு காரணம் கள்ளக்காதலே என்று சொல்லப்படுகிறது. 6 மாசத்துக்கு முன்னாடி ஜெஜெ நகரில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தபோது, அந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இந்த கள்ளக்காதல் சமாச்சாரம் வீட்டில் தெரிந்து பூகம்பமே வெடித்துள்ளது.

தொல்லை

தொல்லை

தினமும் சண்டை நடந்தவாறே இருந்தும் கள்ளக்காதலை கோபிநாத் விடவில்லை என தெரிகிறது. இதைதவிர, கடன் தொல்லையிலும் மாட்டிக் கொண்டு இருந்துள்ளார்.. சம்பவத்தன்றுகூட வீட்டில் தகராறு நடந்திருக்கிறது... இதற்கு பிறகுதான் ஆபீசுக்கு கிளம்பி வந்துள்ளார்..

விசாரணை

விசாரணை

இந்த ஆபீசுக்கு மொத்தம் 3 சாவிகள் உள்ளனவாம்.. அதில் ஒரு சாவி கோபிநாத்திடம் இருந்துள்ளது.. அளவுக்கு அதிகமான மன உளைச்சசல், கள்ளக்காதல், கடன்பிரச்சனை எல்லாம் சேர்ந்து தற்கொலை வரை சென்றிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் உண்மை நிலவரம் குறித்த விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+