யார் அந்த விஐபி? சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி விவகாரத்தில் நடந்தது என்ன? தொகுப்பாளினி பேட்டி
சென்னை: சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி தன்னை ஏமாற்றி, தனது வாழ்க்கையையே அழித்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் புகார் கொடுத்ததற்காக கோயில் பூசாரி கார்த்திக்கின் ஆதரவாளர்கள் தன்னை மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சாலிகிராமத்தை சேர்ந்த டிவி பெண் தொகுப்பாளினி ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கார்த்திக் முனுசாமிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்த போலீசார், அவரை தேடி வந்தனர். முன் ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடக் கோரி புகார் அளித்த பெண் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், புகார் அளித்ததற்காக கார்த்திக் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், தான் அளித்த புகாரின் அடிப்படையில் கார்த்திக்கை இன்னும் காவல்துறை கைது செய்யவோ, அவரிடம் விசாரணை நடத்தவோ இல்லை எனவும், மிகவும் மெத்தனமாக காவல்துறையினர் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். அப்போது பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளினி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: எனக்கும் பூசாரி கார்த்திக்கிற்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்றால் தனக்கு திருமணமாகி டைவர்ஸ் ஆகிவிட்டது என்றுதான் சொன்னார். அவர் சொன்னதையெல்லாம் நான் உண்மை என நம்பிவிட்டதால்தான் இந்த அளவுக்கு நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்.
எந்த குழந்தையையும் அபார்ஷன் செய்ய பெண்கள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் இவர் என்னை கட்டாயப்படுத்தி வடபழனியில் உள்ள மருத்துவரின் பெயரை எனக்கு அனுப்பி அவரை போய் பார்க்குமாறு கூறினார். என்னை கல்யாணம் செய்துக் கொண்டு என் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள்.
கார்த்திற்கிற்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து நான் தட்டி கேட்ட போது என்னை எல்லாரும் மிரட்டினார்கள். நான் 4 பேர் மீது புகார் கொடுத்துள்ளேன். கார்த்திக், பிரியா, காளிதாஸ், ஸ்வேதா ஆகிய 4 பேர்தான் அவர்கள். இதுவரை யாரையும் கைது செய்யாததால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நான் ஹைகோர்ட்டிற்கு வந்துள்ளேன்.
ஸ்வேதா என்ற திருமணமான பெண்ணுடன் கார்த்திக்கிற்கு பழக்கம் ஏற்பட்டு அவர் மூலமாக அந்த பெண்ணுக்கு இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. அவர் 2 ஆவது மனைவி என்பதால் என்னை மிரட்டி பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிடுமாறு ஸ்வேதா கூறினார். அவர் மூலம்தான் கார்த்திக்கின் தில்லுமுல்லு எல்லாமே எனக்கு தெரியவந்தது.
காளிகாம்பாள் கோயிலுக்கு வரும் பெரிய அதிகாரிகளின் செல்வாக்கை பயன்படுத்தி காளிதாஸ் உள்ளிட்டோர் தப்பி வருகிறார்கள். யாரோ ஒரு விஐபியின் பின்னால் கார்த்திக் ஒளிந்திருக்கிறார் என சொல்ல முடியும். இதனால் நான் வாழ்வதா சாவதா என தெரியவில்லை. இவ்வாறு அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியை அவர் நேற்று கொடுத்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் கார்த்திக் முனுசாமியை கொடைக்கானலில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினால்தான் அந்த பெண்ணை எந்த ஒரு விஐபிக்கு விருந்தாக்க முயற்சித்தார் என்பது தெரியவரும்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications