ரஜினிகாந்த்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜுனா! அடுத்த வரியே கொடுத்த விளக்கம்!
சென்னை: ரஜினிகாந்த் குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார். ரஜினி மீது தங்களுக்கு மிகப் பெரிய அன்பு இருப்பதாகத் தெரிவித்த அவர், மிரட்டல் என்றால் நேரடியாக அழைத்து மிரட்டினார்கள் எனச் சொல்லவில்லை என்றும் கீழ்த்தரமான, தனிப்பட்ட அவதூறுகளைப் பரப்புவதையே சொன்னேன் எனக் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டம் ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துகள் சர்ச்சையாக வெடித்தது. ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ரஜினியும் கூட காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்பது போலக் கூறியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனா
அதாவது அன்றைய தினம் ரஜினிகாந்த் திமுக குடும்பத்தினரால் அச்சுறுத்தப்பட்டதாலேயே அரசியலில் இருந்து விலகினார் என்றும் ஆனால் திமுகவை எதிர்த்து நிற்பது விஜய்யின் மன வலிமையைக் காட்டுகிறது என்றும் பேசியிருந்தார். இது பெரிய சர்ச்சையான சூழலில், இதற்கிடையே ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம் கொடுத்துள்ளார்.
இன்று கொளத்தூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதர் அர்ஜுனா, "அன்றைய தினம் தூத்துக்குடி சம்பவத்தை எதிர்த்து நான் பேசினேன். அன்று போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுகவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினேன். அதற்குப் பதில் சொல்லாமல் ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு ஒரு வாரமாக அரசியல் செய்கிறார்கள்.
வெறுப்பு இல்லை
ரஜினி மீது எங்களுக்கு எந்தவொரு வெறுப்பும் கிடையாது.. ரஜினி மீது எங்களுக்கு அன்பு மட்டும் தான் இருக்கிறது; இதை நான் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். நான் அரசியலுக்காக அனைவரையும் தூக்கி எரிந்துவிட்டு வந்துள்ளேன்; எனது குடும்பமே எனக்கு எதிராக உள்ளது. ஆனாலும், மக்களுடன் நிற்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் தூக்கி எரிந்துவிட்டு வந்துள்ளேன்.
எப்போது எல்லாம் திமுகவை எதிர்த்து ஒரு சக்தி வருகிறதோ அப்போது எல்லாம் திமுக இப்படி தான் செய்யும். எம்ஜிஆருக்கும் இதைத் தான் செய்தார்கள். ஆனால், எம்ஜிஆர் அதைத் தாண்டி மக்கள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார். அதன் பிறகு அவர் உயிருடன் இருக்கும் வரை அவரை வீழ்த்த முடியவில்லை. அதேபோலத் தான் ஜெயலலிதாவுக்கும் செய்தார்கள். அவதூறுகளைப் பரப்பினார்கள்.
மன்னிப்பு
எங்களுடைய பாசத்திற்குரிய ரஜினி அவர்களே, எங்களுடைய தலைவருக்கும்(விஜய்) நீங்கள் தான் தலைவர்; என் பேச்சால் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால், என்னுடைய வருத்தத்தையும், மன்னிப்பையும் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
விளக்கம்
மிரட்டல் என நான் சொன்னது ஒருவரை நேரடியாக அழைத்து மிரட்டினார்கள் எனப் பொருள் இல்லை.. அவரை பற்றி கீழ்த்தரமான, தனிப்பட்ட அவதூறுகளைப் பரப்புவார்கள்: அதைத் தான் நான் சொன்னேன்.. ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொன்னபோது நான் திமுகவுக்காக வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போது நாங்கள் நடத்திய சர்வேயில், அவர் அரசியலுக்கு வருவதாகச் சொன்னபோதே ரஜினிக்கு 18% வரை வாக்கு வங்கி இருப்பது எங்கள் சர்வேயில் தெரிய வந்தது. திமுகவுக்கு இதைப் பார்த்தவுடன் பயம் வந்துவிட்டது; அப்போதே ரஜினி குறித்து அவதூறுகளைப் பரப்பினார்கள். இந்த அவதூறுகளைத் தான் நான் மிரட்டல் எனச் சொன்னேன்.
சூழ்ச்சி
ஊழலை ஒழிக்க வேண்டும் என ஒருவர் சொல்லும்போது, சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என ஒருவர் சொல்லும்போது கட்சி மூலம் சமூக வலைத்தளம் மூலம் சூழ்ச்சிகளை உருவாக்கினார்கள். பல அழுத்தங்களைக் கொடுத்தனர். அவரை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதோ அவர் பயந்துவிட்டார் எனச் சொல்வதோ எனது நோக்கம் இல்லை. திமுகவின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினேன். அதுதான் எனது நோக்கம். அதைக் கட் செய்து வேறு விதமாகப் பரப்பிவிட்டனர். தூத்துக்குடி மரணத்தைப் பற்றி யாரும் பேசாமல் இருக்கவே இப்படிச் செய்தனர். இப்போது 6 நாட்களாக அந்த பெண்ணின் மரணம் பற்றி யாருமே பேசவில்லை" என்றார்.
மேலும், விஜய்க்குத் துணை முதல்வர் பதவி 80 சீட்.. அவ்வளவு ஏன் 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவி எனக் கூட ஆஃபர்கள் வந்ததாகவும் இருப்பினும் மக்கள் நலனே முக்கியம் என்பதால் விஜய் அந்த ஆஃபர்களை எல்லாம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார். மேலும், 2026 கூட்டணி கணக்குகள் தூள் தூளாக உடையும் என்றும் தவெக வெல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications