ராகுல் சொல்லியும் கேட்காத சோனியா.. தமிழகத்தில் வாய்ப்பை தவறவிட்ட காங்கிரஸ்! என்ன நடந்தது?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. விஜய் முதல்வராவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தான் தவெக உடன் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி ஆர்வம் காட்டிய நிலையில் சோனியா காந்தி தடுத்து நிறுத்தி தவறு செய்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் புலம்ப தொடங்கி உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக வேட்பாளர்கள் 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளவர்கள். திமுக வேட்பாளர்கள் 48 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக வேட்பாளர்கள் தலா 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
இதன்மூலம் விஜய் தமிழக முதல்வராவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை மிஸ் செய்துவிட்டது. தமிழகத்தில் விஜய், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். ராகுல் காந்தியும் கூட விஜயுடன் கைகோர்க்க விரும்பி உள்ளார். இதனை தான் ராகுல் காந்தியின் ஆதரவாளர்களாக இருக்கும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் எதிரொலித்தனர். கூட்டணி ஆட்சி கூடுதல் சீட் என்று பேசி வந்து திமுகவுக்கு எதிராக பதிவுகள் செய்தனர். பிரவீன் சக்கரவர்த்தி, விஜயை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் தமிழகத்தில் உள்ள ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்டவர்கள் திமுக கூட்டணியில் தொடர விரும்பினர். இந்த பஞ்சாயத்து சோனியா காந்தி வசம் சென்ற நிலையில் அவர் திமுக கூட்டணியில் பயணிக்க கூறினார். ராகுலின் விருப்பத்துக்கு எதிராக அவர் செயல்பட்டார். இதையடுத்து ப சிதம்பரம், திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்து கூடுதலாக 3 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட்டை பெற்றார். காங்கிரஸ் மொத்தம் 29 சட்டசபை தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. தற்போது வரை 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
ஒருவேளை காங்கிரஸ் கட்சி, திமுகவை விட்டு வெளியேறி தவெகவுடன் கூட்டணி வைத்திருந்தால் விஜய் நிச்சயம் 60 முதல் 70 தொகுதிகளை கொடுத்து இருப்பார். இதில் சுமார் 50 தொகுதிகள் வரை இன்று காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம்.
இதன்மூலம் தமிழகத்தில் தமிழக உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை பிடித்து இருக்கலாம். இதன்மூலம் கடந்த 1967 தேர்தலுக்கு பிறகு சுமார் 70 ஆண்டுகளாக தமிழகத்தில் இழந்த செல்வாக்கை காங்கிரஸ் பெற்றிருக்கலாம். ஆனால் காங்கிரஸ் மேலிடம் இந்த வாய்ப்பை நழுவவிட்டுள்ளது. இருப்பினும் எதிர்காலத்தில் அதாவது 2029 நாடாளுமன்ற தேர்தலில் தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைய அதிக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications