Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாளை தவெக ஆர்ப்பாட்டம்.. அதிமுக, பாஜகவை தொடர்ந்து களத்தில்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளை (நவம்பர் 4) கோவையில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, அதிமுக சார்பில் ஏற்கனவே ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெகவும் களத்தில் இறங்கி உள்ளது.

மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கோவையில் தங்கி ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அவர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளார். கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

TVK announces protest in Coimbatore on Nov 4 over gang-rape incident

அப்போது அந்த வழியாக போதையில் வந்த 3 பேர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நின்றிருப்பதை கண்டு அருகே சென்றனர். அங்கு கல்லூரி மாணவியும் ஒரு ஆணும் இருப்பதை கண்டு, அவர்களை வெளியே வருமாறு மிரட்டி உள்ளனர். 3 பேரும் சேர்ந்து கார் ண்ணாடியை உடைத்து, அந்த ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி உள்ளனர். அவர் மயக்கமடைந்ததும், மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வன்கொடுமை செய்து விட்டுத் தப்பினர். இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாளை (நவம்பர் 4) கோவையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகே நாளை பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு தலைகுனியும் அளவிற்கு கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கோவை மாநகர் மாவட்டம் சார்பாக நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நாள்: 04-11-2025 செவ்வாய்கிழமை
நேரம்: மதியம் 12 மணி முதல்
இடம்: செஞ்சிலுவை சங்கம், பந்தயச்சாலை, கோவை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தவெக தலைவர் விஜய், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்." என விஜய் வலியுறுத்தினார்.

இதேபோல, கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும்; தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஆட்சியைக் கண்டித்தும் அதிமுக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில், 4.11.2025 செவ்வாய்க் கிழமை காலை 11 மணியளவில், கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் வானதி சீனிவாசன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் பாதுகாப்புக்கு பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்த வலியுறுத்தப்பட்டதுடன், குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல சட்டம் இயற்ற வேண்டும் என்றும், திமுக அரசு பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நவம்பர் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+