விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. இனி பேனர், பிளக்ஸ்,பதாகைகள் வைக்கக் கூடாது.. தவெக அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனது கட்சி தோழர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிறந்தநாள் விழாக்கள், குடும்ப விழாக்கள் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, பொது இடங்களிலோ பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து பல அறிவிப்புகள் வெளியிட்டு வரும் வேளையில், கட்சி சார்பில் கட்சி தொண்டர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத் தோழர்கள் அனைவரும் தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் கட்சி பெரும் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிறந்தநாள் விழா அல்லது குடும்ப விழாக்கள் தொடர்பாக சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ பேனர்கள் அல்லது பதாகைகள் வைக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
கொண்டாட்டங்களில் கட்டுப்பாடு
கட்சி தோழர்கள் எந்தவிதமான கொண்டாட்டங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது என்று அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு முதலமைச்சர் விஜய் அவர்களின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே இந்த அறிவிப்பின் நோக்கம் என்று கட்சி தரப்பு விளக்கியுள்ளது.
கடுமையான நடவடிக்கை எச்சரிக்கை
பேனர்கள், பதாகைகள் அல்லது வேறு எந்த வகையிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் நலன் முதன்மை
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதே தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் நலனுக்காகவே என்று கட்சி தலைமை தனது பதிவில் கட்சி தொண்டர்களுக்கு நினைவூட்டியுள்ளது. எனவே கழகத் தோழர்கள் அனைவரும் இந்த அறிவிப்பை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்!












Click it and Unblock the Notifications