3 -4 தொகுதியில் விஜய் நிற்பார்.. மேடையில் உளறிய புஸ்ஸி ஆனந்த்.. தவெக பொதுச்செயலாளருக்கே சட்டம் தெரியலையே! ட்ரோல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை அல்லது நாடாளுமன்ற தேர்தலில் ஒருவர் அதிகபட்சமாக 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால் அது கூட தெரியாமல் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ‛3 முதல் 4 தொகுதிகளில் விஜயால் போட்டியிட முடியும்' என மேடையில் தப்பு தப்பாக உளறி தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் தற்போது புஸ்ஸி ஆனந்தை பலரும் இணையதளங்களில் ட்ரோல் செய்ய தொடங்கி உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் மாநில, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடந்தது.

tvk-bussy-ananad-trolled-by-netizens-after-he-says-vijay-can-only-constest-3-to-4-constituency-only

தவெக தலைவர் விஜய், கட்சியின் மூத்த தலைவர்களாக உள்ள செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, அர்ஜுன் சம்பத் உள்பட முக்கிய நிர்வாகிகள் பேசினர். இந்த கூட்டத்தில் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் பேசினார்.

புஸ்ஸி ஆனந்த் பேசும்போது,‛‛2026ல் நாம் ஜெயிச்சே ஆகனும். ஏனென்றால் முதல் அமைச்சர் என்பது வெறும் வாயால் மட்டும் சொல்லிவிட்டால் போதாது. நமது உழைப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும். காலையில் 6 மணிக்கு நாம் பூத் சென்றால் இரவு 7 மணி வரை அங்கு இருக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் சாயங்காலம் 5, 5.30 மணிக்கு 20 ஓட்டு போட்டு கொள்வோமா? என்பார்கள்.

20 ஓட்டு கிடைக்கிறதே என்று ஒப்புக்கொள்ளக்கூடாது. ஏனென்றால்அவர்கள் எல்லாம் பழைய ஆட்கள். டம்மியா ஆளை போட்டு கொண்டு 100 ஓட்டு போட்டு கொண்டு நமக்கு 20 ஓட்டு போட கேட்பார்கள். திருட்டு ஓட்டு போட வேண்டாம். எங்களுக்கு மக்கள் ஓட்டு போட்டு இருப்பார்கள் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

நமக்கு முகமே விஜய் தான். தலைவர் விஜய்க்காக எல்லாமே வரும். விஜய் 5 நிமிடம் பேசினால் அது 50 நாட்கள் வரை பேசும் பொருளாக இருக்கும். 2026ல் 234 தொகுதிகளிலும் விஜய் நின்றாலும் ஜெயித்து விடுவார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அரசியல் சட்டத்தின்படி ஒரு நபர் 3 அல்லது 4 தொகுதியில் தான் நிற்க முடியும். அதனால் விஜய் ஜெயித்துவிடுவார்.

தலைவர் காட்டும் அனைவரும் ஜெயித்தால் தான் விஜய் முதல்வராக முடியும். அதை மனதில் வைத்து கொள்ள வேண்டும். திரும்ப திரும்ப நான் சொல்கிறேன். விஜய் யாரை வேட்பாளராக கை காட்டுகிறாரோ அவரை வெற்றி பெற செய்ய வேண்டியது தான் நம்முடைய கடமையாக இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

நம் நாட்டில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சட்டசபை தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் ஒருவரால் அதிகபட்சமாக 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். அதன்படி பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சித்தராமையா உள்பட பல தலைவர்கள் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர். இதில் ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் அதன் எம்எல்ஏ அல்லது எம்பியாக இருப்பார்கள்.

ஒருவேளை 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு தொகுதியின் எம்எல்ஏ அல்லது எம்பி பதவியை ராஜினாமா செய்வார்கள். இதுதான் நம் நாட்டின் சட்டமாக உள்ளது. ஆனால் புஸ்ஸி ஆன்ந்துக்கு அதுபற்றி தெரியாமல் விஜயால் 3 முதல் 4 தொகுதிகள் வரை போட்டியிட முடியும் என்று உளறியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கட்சி. இன்னும் எந்த தேர்தலையும் அவர்கள் சந்திக்கவில்லை. தேர்தல் பற்றிய புரிதல் தவெகவினருக்கு இன்னும் வரவில்லை. அவர்கள் இன்னும் விஜயின் ரசிகர்களாகவே உள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் தவெகவினர் தேர்தல் பற்றி புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர், அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இப்படியான சூழலில் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் இப்படி விவரம் தெரியாமல் பேசி சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+