மாவட்ட செயலாளரையே கோர்ட்டில்.. விட்டுக்கொடுத்த புஸ்ஸி ஆனந்த்.. கொதிக்கும் தவெக நிர்வாகிகள்!
சென்னை: கரூர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளரை குற்றச்சாட்டும் வகையில் புஸ்ஸி ஆனந்த் வாதம் வைத்தது அந்த கட்சி மாவட்ட செயலாளர்களை அதிர்ச்சிக்கு ஆழ்த்தி உள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி எம். ஜோதிராமன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்தார் . . இந்த வழக்கில் நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். அதில், ஒரு நிகழ்ச்சியை நடத்திய நபராக உங்களுக்கு இந்த விவகாரத்திற்கு பொறுப்பு இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழக வெற்றிக் கழகத்தை கண்டித்த நீதிபதிகள், உங்கள் மீது தவறே இல்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் தானே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தீர்கள். உங்கள் மீது தவறு இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்.. நான் மக்கள் பக்கம் இருந்தே நடவடிக்கை எடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருந்தே நடவடிக்கை எடுக்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.
புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்
இதற்கு புஸ்ஸி ஆனந்த் தரப்பு.. இதில் என் மீது ஆக்சன் எடுக்க வேண்டியது ஏன்? நிகழ்ச்சியை நான் ஒருங்கிணைக்கவில்லை. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன். அவரை ஏற்கனவே கைது செய்துவிட்டனர். அவர் மீது நான் குற்றஞ்சாட்டவில்லை. அவரை கைது செய்துவிட்டனர். அப்படி இருக்க என் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
எங்கள் சொந்தக் கட்சியினரைக் கொல்லும் எண்ணம் இல்லை. ஒரு விபத்தை குற்றமற்ற கொலை என்று கூற முடியாது.
காவல்துறை போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறியதுதான் சிக்கலுக்கு காரணம். நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் காவல்துறையிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால், அந்த இடம் மனுதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, அது போலீஸ் எங்களுக்கு வழங்கிய இடம். இதற்கு பின் ஒரு தீய நோக்கம் இருப்பதாக நினைக்கிறோம். கூட்டம் அதிகமான போது கூட்டத்திற்குள் சில குண்டர்கள் நுழைந்தனர். அவர்கள் கைகளில் ஆயுதங்களை வைத்து இருந்ததாக மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். திட்டமிட்டு இதில் அசம்பாவிதம் செய்துள்ளனர், என்று வாதம் வைத்தனர்.
கொதிக்கும் நிர்வாகிகள்
கரூர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளரை குற்றச்சாட்டும் வகையில் புஸ்ஸி ஆனந்த் வாதம் வைத்தது அந்த கட்சி மாவட்ட செயலாளர்களை அதிர்ச்சிக்கு ஆழ்த்தி உள்ளது. அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
மாவட்ட செயலாளரை இப்படி விட்டுக்கொடுத்திருக்க கூடாது. திமுக, அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள்தான் எல்லாம். மாவட்ட செயலாளர்கள்தான் அங்கே பவர் புல். அதிலும் திமுகவில் எல்லாம் அமைச்சர்கள், எம்பிக்களை விட மாவட்ட செயலாளர்கள்தான் பெரிய ஆட்கள். அங்கே அவர்களை கொண்டாடுவார்கள்.
ஆனால் இங்கே முதல் வழக்கிலேயே மாவட்ட செயலாளர் தூக்கி வீசப்பட்டு உள்ளார். மாவட்ட செயலாளர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. விஜய் - புஸ்ஸி ஆனந்த் போட்ட திட்டத்தைதான் நாங்கள் செய்கிறோம். அப்படி இருக்க கோர்ட்டில் எங்களை கழற்றிவிடுவது எப்படி சரியாக இருக்கும். இதே விவகாரம் மற்ற மாவட்டங்களில் நடந்தால்.. எங்களுக்கும் இப்படித்தானே இருக்கும் என்று தவெக நிர்வாகிகள் கொதிப்பில் இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications