தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் பாஜக மீது கடும் நடவடிக்கை பாயட்டும்- தி.வேல்முருகன்
சென்னை: தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: தஞ்சை மாவட்டம் - மைக்கேல்பட்டி தூய இருதய ஆண்டவர் மேனிலைப்பள்ளியின் மாணவியின் தற்கொலையில் மதமாற்றத்திற்கான காரணம் இல்லை என்று தஞ்சை மாவட்டக் காவல்துறையும், பள்ளிக் கல்வித்துறையும் தெளிவுப்படுத்தி விட்டன.

பாஜகவின் நாடகங்கள்
அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களில் பெரும்பான்மையினர் இந்துக்களே. அவர்கள் யாரும் இதுபோன்ற மதமாற்றப் புகாரை இதுவரை கூறியதில்லை. ஆனாலும், இந்து மதத்தை சேர்ந்த பள்ளி மாணவியை, கிறித்துவ மதத்திற்கு மாற்ற பள்ளி நிர்வாகப் பொறுப்பாளர்கள் வலியுறுத்தினார்கள் என்றும் அதனால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் பாஜகவினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, போராட்டம் என்ற பெயரில், பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியும் வருகின்றனர்.

அகில இந்திய பிரச்சனையாக்குகிறது
அதுமட்டுமின்றி, மாணவியின் தற்கொலையில் மதமாற்றத்திற்கான காரணம் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இவ்விவகாரத்தை அனைத்திந்திய பிரச்சினையாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக, கள ஆய்வு என்ற பெயரில், விசாரணை மேற்கொள்ள பாஜக தலைமை 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

நீட், மாடு வரிசையில் மாணவி மரணம்
தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பாஜக, இதுவரை ரஜினியையும், நீட்டையும், மாட்டையும் வைத்து அரசியல் செய்தது. இது தமிழ்நாட்டு மக்களிடையே எடுபடவில்லை என்ற நிலையில், தற்போது பள்ளி மாணவியின் தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

பாஜக மீது நடவடிக்கை தேவை
அதாவது, குஜராத், உத்தரப்பிரதேச மாநிலத்தை போன்று, தமிழ்நாட்டிலும் செயற்கையாக மதக்கலவரத்தை தூண்டி, பாஜகவை வளர்த்து, ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற பாஜகவின் திட்டம், வெட்ட வெளிச்சமாக புலப்படுகிறது. எனவே, பொய் பரப்புரையின் வாயிலாக, தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட நினைக்கும் பாஜக மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications