Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டத்தை பார்த்தீங்களே.. அரசியல் தான் என் எதிர்காலம்.. NDTV பேட்டியில் உறுதியாக சொன்ன விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் முதல் முறையாக என்டிடிவி ஆங்கில சேனலுக்கு பேட்டியளித்தார். இது ‛ஆஃப் கேமரா' பேட்டியாகும். இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தாலும் கூட விஜய் தனது தொண்டர்களுக்கு முக்கிய விஷயத்தை கடத்தி உள்ளார். அரசியல் தான் எதிர்காலம். நான் கிங் மேக்கராக வரவில்லை. போராடி தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளனர்.

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து களமிறங்குவதாக அறிவித்து தொகுதி வாரியாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.

vijay tvk 2026

நடிகராக இருந்து அரசியலுக்கு என்ட்ரி கொடுத்துள்ள விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். தன்னுடன் கூட்டணி வைத்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் எந்த கட்சிகளும் அவரது கூட்டணியில் இணையவில்லை. இதனால் அவரும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறார்.

என்டிடிவி பேட்டி

விஜயை எடுத்து கொண்டால் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்து வருகிறார். பொதுக்கூட்டம், பிரசார நிகழ்ச்சிகளில் மட்டுமே விஜய் பேசி வருகிறார். இல்லாவிட்டால் சென்னை பனையூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் மட்டுமே பேசி வருகிறார். இந்நிலையில் தான் சென்னையில் என்டிடிவி ஊடகத்தின் ‛NDTV Tamil Nadu Summit' என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது.

‛ஆஃப் கேமரா பேட்டி’

இதற்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் விஜய் பங்கேற்கவில்லை. மாறாக என்டிடிவி பத்திரிகையாளர்களை தான் இருக்கும் இடத்துக்கு அழைத்து விஜய் பேட்டியளித்துள்ளார். அதுவும் ‛ஆஃப் கேமரா' பேட்டி. அதாவது பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட பிறகு விஜய் அதற்கு பதிலளிப்பார். இருப்பினும் அது கேமராவில் ரெக்கார்ட் செய்யப்படாது என்பது தான் ‛ஆஃப் கேமரா' பேட்டி.

விஜய் அளித்த விளக்கம்

விஜயிடம் என்டிடிவி சார்பில் தலைமை ஆசிரியர் ராகுல் கான்வால்,அரசியல் பிரிவின் ஆசிரியர் வசுதா வேணுகோபால் ஆகியோர் பேட்டி எடுத்தனர். அப்போது ஜனநாயகன் படப்பிரச்சனை, கரூர் கூட்ட நெரிசல், மற்றும் விஜயின் அரசியல் எதிர்காலம் என்று பல்வேறு விஷயங்கள் பற்றி கேட்கப்பட்டது. விஜயிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அவர் வழங்கிய பதில்கள் பற்றி என்டிடிவின் ராகுல் கான்வால், வசுதா வேணுகோபால் ஆகியோரிடம் நிர்வாக ஆசிரியர் ஷிவ் அரூர் பேட்டியாக அளித்தனர்.

தன்னம்பிக்கை இல்லா தலைவர் என நினைத்தேன்

அப்போது அவர்கள், ‛‛விஜய் பேட்டியில் நான் ‛இம்ப்ரஸ்' ஆனேன். நாங்கள் விரிவாக பல விஷயங்களை பேசினோம். இது தேசிய ஊடகத்துக்கான Mock Interview என்று கூறினார். உண்மையில் நான் குறைந்தபட்ச எதிர்பார்ப்பில் தான் சென்றேன். ஏனென்றால், அவர் பொதுவெளியில் பேசியதில்லை, கேள்விகளுக்குப் பதிலளித்ததில்லை.

அவர் தனது உரைகளில் பேசி வருகிறார், ஆனால் கேள்விகளுக்குப் பதிலளித்ததில்லை. அதனால், ஒருவேளை இவர் தன்னம்பிக்கை இல்லாத, கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்பாத நபராக இருப்பாரோ என்று நினைத்தேன்.

கூட்டத்தை பார்க்கவில்லையா?

ஆனால், அவரிடம் 45 நிமிடங்களுக்கும் மேலாக எல்லாவிதமான கேள்விகளையும் கேட்டோம். அனைத்து வகையான கேள்விகளுக்கும் அமைதியான முறையில் பதிலளித்தார். தேர்தலில் ‛கிங் மேக்கராக வருவீர்களா?'' என்ற கேள்வியை எழுப்பியபோது அவர் ஷாக்காகி பார்த்தார்.

‛‛நான் வெற்றி பெறுவேன். கிங்மேக்கராக நான் எதற்கு? வரும் கூட்டத்தைப் பார்க்கவில்லையா?" என்று விஜய் கேள்வி எழுப்பினார். மேலும் தனது ரோல் மாடல்கள் எம்ஜிஆர், ஜெ. ஜெயலலிதா என்று கூறினார். எனக்கு வரும் கூட்டங்களை பார்த்தீர்களா? என்று கேட்டார். இதன்மூலம் விஜய் தனது ரசிகர்களை கட்சி தொண்டர்களாக்க விரும்புவது தெரிகிறது.

எளிதானதாக இருக்காது

அதோடு விஜய் அரசியலில் நீண்டகால பயணத்தை திட்டமிட்டுள்ளார். இது ஒரு தேர்தலுக்கான விஷயம் அல்ல. பல தசாப்தங்களாக உச்ச நட்சத்திராக இருந்த அவர் இப்போது அவரது மனம் முழு நேர அரசியலில் உள்ளது.

உண்மையில் திரைப்பட ஸ்டார் அந்தஸ்திலிருந்து அரசியல்வாதியாக மாறுவது எளிதல்ல என்பதையும் ஒப்புக்கொண்டார். இந்த மாற்றம் எளிதானதாக இருக்காது என்பதையும் அவர் உணர்ந்துள்ளார்'' என்று என்டிடிவி பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எம்ஜிஆர் - ஜெயலலிதா பாணியில்..

நடிகர் விஜய் அரசியல் பயணத்துக்கான தனது திரைப்பயணத்துக்கு முழுக்கு போட்டுள்ளார். அவர் நடித்து சிக்கலில் உள்ள ‛ஜனநாயகன்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. சென்சார் சான்று கிடைத்தவுடன் அந்த திரைப்படம் வெளியாகும்.

தமிழக அரசியலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை ரோல் மாடலாக விஜய் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் திரைத்துறையை விட்டு வந்துஅரசியலில் சாதித்தவர்கள். அந்த பாணியில் தான் விஜயும் திரைத்துறையை விட்டு அரசியலுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

நீண்ட பதில் சொன்ன விஜய்

மேலும் இந்த பேட்டியில் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை தந்தது. அது இன்னும் பல வழிகளில் தொந்தரவு செய்கிறது. ஏனென்றால் அப்படி நடக்கும் என்று ஒருபோதும் நான் நினைக்கவில்லை என்று வருத்தப்பட்டார்.

'ஜனநாயகன்' திரைப்படம் வெளியீட்டுக்கு அனுமதி கிடைக்காததால் தனது தயாரிப்பாளர் துன்பப்படுவதை நினைத்து வருத்தமடைவதாக கூறினர். நடிகராக இருந்து இருந்து அரசியலுக்கு வந்தால் இப்படி நடக்கும் என்பதை அவர் எதிர்பார்த்து தயாராக இருந்ததாக கூறினார்.

அரசியல் தான் தனது எதிர்காலம் என்பதை விஜய் முடிவு செய்துள்ளார். இந்த பேட்டியின்போது விஜய் அமைதியாகவும், அதேவேளையில் மிகவும் உறுதியாகவும் தெரிந்தார். விஜய் ஒரு வரியில் பதில் தருவதாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அவர் நியாயமான அதேவேளையில் நீண்ட பதில்களை எங்களுக்கு தந்தார் என்று என்டிடிவி பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+