Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேட்டி எடுத்தவரையே பேட்டி எடுக்குற நிலைமைக்கு தள்ளிய விஜய்.. இப்படி நடந்ததே இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் முதல் முறையாக என்டிவி ஆங்கில சேனலுக்கு பேட்டியளித்தார். இந்த வேளையில் அவர் தனது பேட்டியை வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கவில்லை. இதனால் விஜயிடம் பேட்டியெடுத்த பத்திரிகையாளர்கள் அவர் கூறிய கருத்துகளை தனியே பேட்டியளித்து மக்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விஜயின் இந்த செயல்பாட்டை நெட்டிசன்கள் கேலி, கிண்டலுடன் ட்ரோல் செய்ய தொடங்கி உள்ளனர்.

சென்னையில் என்டிடிவி ஊடகத்தின் ‛NDTV Tamil Nadu Summit' என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களின் திட்டம், பார்வைகள் குறித்து இந்த நிகழ்ச்சி மூலமாக என்டிடிவி மக்களிடம் எடுத்து செல்கிறது.

vijay tvk 2026

சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பர் எம்பி, பாஜக சார்பில் எச் ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இவர்கள் என்டிடிவி நடத்தும் நிகழ்ச்சியின் மேடைக்கு சென்று பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து பேசினர்.

விஜயின் முதல் பேட்டி

இந்நிலையில் தான் புதிதாக அரசியலுக்கு வந்த விஜயை, என்டிடிவி நிகழ்ச்சிக்கு அழைத்தது. ஆனால் அவர் நேரில் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மாறாக விஜய் என்டிடிவி பத்திரிகையாளர்களை தான் இருக்கும் இடத்துக்கு அழைத்து பேட்டியளித்துள்ளார். மேலும் தேசிய ஊடகத்துக்கு அவர் அளித்த முதல் பேட்டி இதுவாகும்.

வீடியோ பதிவுக்கு அனுமதி மறுப்பு

அப்போதும் கூட அவர் அந்த பேட்டியை வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் என்டிடிவி பத்திரிகையாளர்கள் விஜயிடம் எடுத்த பேட்டியை தனியாக பேட்டியாக அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது என்டிடிவி சார்பில் தலைமை ஆசிரியர் ராகுல் கான்வால், அரசியல் பிரிவின் ஆசிரியர் வசுதா வேணுகோபால் ஆகியோர் விஜயை சந்தித்து பேட்டியளித்தனர்.

விஜய் வீடியோ எடுக்க அனுமதிக்காத நிலையில் அவர்கள் 2 பேரிடமும் என்டிடிவின் நிர்வாக சிரியர் ஷிவ் அரூர் பேட்டி எடுத்தார். விஜய் உடனான சந்திப்பு எப்படி இருந்தது? அவர் என்ன சொன்னார் என்று விஜயிடம் பேட்டி எடுத்த ராகுல் கான்வால், வசுதா வேணுகோபால் ஆகியோரிடம் ஷிவ் அரூர் கேட்டார்.

என்டிடிவி பத்திரிகையாளர் பேட்டி

விஜய் தங்களிடம் கூறியதாக என்டிடிவின் ராகுல் கான்வால், வசுதா வேணுகோபால் ஆகியோர் கூறியதாவது: ‛‛விஜய், என்டிடிவி தேசிய செய்தி சேனலுக்கு முதல் முறையாக பேட்டியளித்துள்ளார். 45 நிமிடங்கள் வரை விஜய் பேட்டியளித்தார். என்டிடிவி தமிழ்நாடு கான்கிளேவில் ஸ்டாலின், எடப்பாடி, உதயநிதி, கனிமொழி, கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் ஒருவர் மிஸ்ஸானார்.சூப்பர்ஸ்டார் விஜய் மிஸ்ஸானார்.

சரியான நேரத்தில் பேசுவேன்

இன்று (அதாவது நேற்று) மாலையில் போன் வந்தது. வசுதாவும், நானும் சென்றோம். நாங்கள் செல்ல இருந்தோம். கேப் பிடித்து விஜயை மீட் செய்தோம். நான் ‛இம்ப்ரஸ்' ஆனேன். நான் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.

அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.. நான் போதுமான அளவு பேசவில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், நான் என் உரைகளின் மூலம் பேசிக்கொண்டே இருக்கிறேன். நான் எப்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். சரியான நேரத்தில் நான் ஊடகங்களிடம் பேசுவேன் என்று கூறினார்.

கரூர் நெரிசலால் தொந்தரவு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை தந்தது. அது இன்னும் பல வழிகளில் தொந்தரவு செய்கிறது. ஏனென்றால் அப்படி நடக்கும் என்று ஒருபோதும் நான் எண்ணவில்லை. அரசியல் தான் தனது எதிர்காலம் என்பதை விஜய் முடிவு செய்துள்ளார்.

'ஜனநாயகன்' திரைப்படம் வெளியீட்டுக்கு அனுமதி கிடைக்காததால் தனது தயாரிப்பாளர் துன்பப்படுவதை நினைத்து வருத்தமடைவதாக கூறினர். நடிகராக இருந்து இருந்து அரசியலுக்கு வந்தால் இப்படி நடக்கும் என்பதை அவர் எதிர்பார்த்து தயாராக இருந்ததாக கூறினார்.

விஜயை குறைத்து மதிப்பீடு செய்கின்றனர்

இந்த பேட்டியின்போது விஜய் உறுதியான, மிகவும் அமைதியானவாக தோன்றினார். விஜயை குறைத்து மதிப்பீடு செய்கின்றனர். அவர் ஒரு வரியில் பதில் தருவதாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அவர் நியாயமான அதேவேளையில் நீண்ட பதில்களை எங்களுக்கு தந்தார்.
தான் ஒரு ஷாருக்கான் ரசிகர் என்று கூறினார்.

எம்ஜிஆர் - ஜெயலலிதா ரோல் மாடல்

அவரது ரோல் மாடல்கள் எம்ஜிஆர், ஜெ. ஜெயலலிதா என்று கூறினார். நான் கிங்மேக்கர் என்று கூற விரும்பவில்லை. கடின உழைப்பில் நான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். எனக்கு வரும் கூட்டங்களை பார்த்தீர்களா? என்று கூறினார். இதன்மூலம் விஜய் தனது ரசிகர்களை கட்சி தொண்டர்களாக விரும்புவது தெரிகிறது

விஜய் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போராடுகிறார். திரைத்துறையில் நீண்டகாலமாக அவர் முன்னணி நடிகராக இருந்தார். அரசியலில் அப்படி பயணப்பட விரும்புகிறார். தனது முழு மனதை அரசியலில் வைத்துள்ளார். ஆனால் மாற்றம் எளிதானது அல்ல'' என்று விஜய் கூறியதாக என்டிடிவியின் தலைமை ஆசிரியர் ராகுல் கான்வால், அரசியல் பிரிவு ஆசிரியர் வசுதா வேணுகோபால் ஆகியோர் கூறினர்.

நெட்டிசன்கள் ட்ரோல்

அவர்கள் 2 பேரின் விஜயின் கருத்துகளை கூறினர். இந்த வீடியோ வெளியான நிலையில் விஜயை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் பனையூரை விட்டு வெளியேற வந்து அரசியல் செய்யாமல் உள்ளதாகவும், பனையூர் பண்ணையார் என்றும் திமுக, அதிமுக உள்பட பல கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில் அவர்களை நேரில் விஜய் சந்திக்காமல் பனையூருக்கு அழைத்து சந்தித்தார்.

கள அரசியலில் விலகி இருக்கும் விஜய்

அதேபோல் சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியபோதும் அவர்களை பனையூர் அழைத்து ஆதரவு வழங்கினார். இப்படி கள அரசியலில் இருந்து விலகியே இருக்கும் விஜய், தொலைக்காட்சி பேட்டியையும் கூட வீடியோ பதிவு செய்ய அனுமதிக்காமல் தான் இருக்கும் இடத்துக்கு வந்து பேட்டி எடுக்க கூறியுள்ளதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

வாய்ப்பை வீணடிக்கும் விஜய்

பொதுவாக தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும்போது அந்த தலைவரின் முக பாவனைகள் அனைத்து மக்களுக்கும் நேரடியாக தெரியும். இது ஒவ்வொரு விஷயங்களிலும் அவரது கருத்தை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும்.

வெறுமனே அறிக்கை விடுவது, எக்ஸ் வலைதளத்தில் ஒரு விஷயத்தை பற்றி பேசுவதை விட தொலைக்காட்சியில் முகத்தை காண்பித்து தனது கருத்தை எடுத்து வைப்பது மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும். ஆனால் விஜய் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் வீணடித்து வருவதாகவும், பண்ணையார் போன்று அவரது செயல்பாடுகள் இருப்பதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+