நம்பர் 3.. விஜயிடம் ஜோசியர் காட்டிய குறிப்பு.. நம்பர் 2வை டிக் அடித்த தவெக.. அப்போ எல்லாம் ஓவர்?
சென்னை: தமிழக வெற்றி கழகம் (TVK) தனது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. கட்சித் தலைவர் விஜய் கடைசி நிமிடத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டதே இந்த ஒத்திவைப்புக்குக் காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜோதிடர் ஒருவர், வேட்பாளர்களை அறிவிக்க இது உகந்த நேரம் இல்லை என அறிவுறுத்தியதையடுத்தே விஜய் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அனைத்து ஏற்பாடுகளும் முடிந்திருந்த நிலையிலும், விஜயின் இந்த திடீர் தள்ளிவைப்பு, ஆவலுடன் காத்திருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தமிழக வெற்றிக் கழகம்
விஜய் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் ஜோதிடர் ஆலோசனை வழங்கியுள்ளார். வரவிருக்கும் தேர்தலில் விஜய் போட்டியிட மூன்று தொகுதிகள் சாதகமானவை என அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் போட்டியிடுங்கள் என்று ஜோசியர் விஜயிடம் கூறியதாக தெரிகிறது. அவற்றில் இருந்து இரண்டு தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து இரு தொகுதிகளிலும் அவர் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி அரசியல் வட்டாரங்கள் மற்றும் TVK தொண்டர்களிடையே முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே விஜய் தனது முக்கிய அரசியல் முடிவுகளுக்கு இந்த ஜோதிடரை அதிகம் சார்ந்துள்ளதாக கட்சி உள்வட்டங்கள் கூறுகின்றன. அறிவிப்பு நேரம், வியூகம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் ஜோதிடருடன் கலந்துலோசித்த பின்னரே எடுக்கப்படுகின்றன. கட்சியில் சில தலைவர்கள் இந்த அணுகுமுறையால் அதிருப்தியில் இருந்தாலும், மற்றவர்கள் ஜோதிடர் மீதான விஜயின் நம்பிக்கையைப் புரிந்துகொள்கின்றனர்.
தவெக கட்சிக்குள் குழப்பம்
கள நிலவரத்தையும் மக்கள் கருத்தையும் மட்டுமே அரசியல் முடிவுகள் சார்ந்து இருக்க வேண்டும், ஜோதிடத்தை அல்ல என TVK-வை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. மேலும், இந்த தாமதங்கள் கட்சி வேகத்தைக் குறைக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.
ஆனால், TVK ஆதரவாளர்கள் விஜயின் தனிப்பட்ட நம்பிக்கை அவரது விருப்பம் எனவும், கட்சி சரியான நேரத்தில் வேட்பாளர்களை அறிவிக்கும் எனவும் கூறுகின்றனர். வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. எனினும், ஜோதிட ரீதியாக உகந்த தேதி உறுதிசெய்யப்பட்டதும் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜோசியரை தீவிரமாக நம்பும் விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மிக தீவிரமாக ஒரு ஜோசியரை நம்பி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஜோசியர் சொல்லும் விஷயங்களை எல்லாம் விஜய் அப்படியே தட்டாமல் கேட்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயிடம்.. ஜனவரி வரை சவால்கள் இருக்கும்.. அதற்கு பின் இப்போது நிலவும் நிலைமை சரியாகிவிடும் என்று அந்த ஜோசியர் கூறி இருக்கிறார்.
விஜயின் பெரும்பாலான முடிவிற்கு அரசியல் தாண்டி.. அவரின் ஜோசியர் ஒருவர்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதாவது அரசியல் ரீதியாக அவர் முடிவுகளை எடுக்காமல் பல இடங்களில் ஜோசியர் சொன்னதை கேட்டு முடிவு எடுப்பதாக கூறப்படுகிறது.
கரூர் விஜய் திடீர் ஆலோசனை
ஜனவரி வரை சவால்கள் இருக்கும். அதற்கு பின் நிலைமை சரியாகிவிடும் என்று அந்த ஜோசியர் கூறி இருக்கிறார். விஜய் தான் எடுக்கும் பெரும்பாலான முடிவுகளை அந்த ஜோசியர் சொன்னதை கேட்டே எடுப்பதாக கூறப்படுகிறது. அந்த ஜோசியர் சொல்லும் விஷயங்களை எல்லாம் விஜய் அப்படியே தட்டாமல் கேட்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TVK அரசியல் முடிவுகளை கூட அவர் இதை நம்பித்தான் எடுக்கிறார். தவெக எல்லாம் இருக்கட்டும்.. பர்சனல் முடிவுகளை கூட அவரை நம்பித்தான் எடுக்கிறார். விஜய் பெரும்பாலும் அரசியல் ஆலோசகர்கள் சொல்வதை விட.. இந்த ஜோசியர் சொல்வதைத்தான் அதிகம் கேட்கிறார். நம்பிக்கை இருக்கலாம்.. ஆனால் பல முடிவுகளை அதை வைத்து எடுப்பது சரியில்லை என்று அவருக்கு நெருக்கமான சிலர் புலம்பி வருகிறார்களாம்.
-
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
அதிமுகவில் பட்ட கஷ்டம்! தவெகவில் மரியாதை கொடுத்தால் போதும்! பதவிலாம் வேண்டாம்! உடுமலை ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications