கொடி நிகழ்ச்சியில் பரபரப்பு.. தாய் ஷோபா கையை பிடித்து கூப்பிட்டும் புஸ்ஸி ஆனந்த் கூட போனாரா விஜய்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் விழாவில் தாய் ஷோபா கையை பிடித்து அழைத்த போது நடிகர் விஜய் என்ன செய்தார் தெரியுமா? அத்தனை பேருக்கு மத்தியில் நடந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தனது கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என விஜய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்சியை எப்போது தொடங்குவார், என்ன பெயர் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் கட்சியின் பெயர் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் கட்சியின் கொடி என்ன என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் கட்சிக் கொடியையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
இந்த விழாவுக்காக நடிகர் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்ஸி ஆனந்து வரவேற்றார். இந்த விழாவில் கட்சியின் பொருளாளர், கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஜய்யின் கொடி அறிமுக விழாவிற்கு அவருடைய தாய் ஷோபாவும், தந்தை சந்திரசேகரும் வருகை தந்தனர். இதையடுத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். அதில் சிவப்பு , மஞ்சள் நிறத்தில் கொடியிருந்தது. நடுவே வெற்றிக்கு அடையாளமான வாகை மலரும், இரு போர் யானைகளும் இருந்தன.
இந்த கொடியை பனையூர் கட்சி அலுவலகத்திலும் அவர் ஏற்றி வைத்தார். இதை தவெக நிர்வாகிகள் கைதட்டி வரவேற்றார். பிறகு கொடி பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழா முடிந்ததும் வெளியே நின்றிருந்த ரசிகர்களை விஜய் சந்தித்தார். அப்போது ஷோபா, புஸ்ஸி ஆனந்தை அழைத்து கொடியேற்ற விழா வெற்றிக்காக கை கொடுத்து வாழ்த்தினார்.
இதையடுத்து அவ்வழியாக வந்த விஜய்க்கும் வாழ்த்து சொல்ல அவரது கையை ஷோபா பிடித்தார். ஆனால் விஜய்யோ தனது தாயை கண்டும் காணாமல் அவர் பாட்டுக்கு நிற்காமல் புஸ்ஸி ஆனந்த் பின்னால் சென்றார். இதனால் ஷோபாவின் முகமே மாறிவிட்டது. ஆனால் நாகரீகம் கருதி பிள்ளையை விட்டுக் கொடுக்காமல், தன் பிள்ளை பிஸியாக இருப்பதை போன்றே ஒரு சிரிப்பை பதிலாக கொடுத்துவிட்டு சென்றார்.

விஜய் அரசியலுக்கு வருவதாக நீண்ட காலமாக சொல்லி வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி விஜய்யின் தந்தை சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினார். இது விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தியது. அரசியலுக்கு வருவதற்கான நேரம் வரும் வரை சற்று பொறுமையாக இருக்குமாறு விஜய் கூறியும் தந்தை இவ்வாறு செய்துவிட்டாரே என விஜய் கோபப்பட்டார்.
SHAME ON YOU VIJAY😡
— Kingsley (@CineKingsley) August 22, 2024
👉 மேடையில் விஜய் : “கொடி அறிமுக விழாவிற்கு, அம்மா அப்பா வந்தது சந்தோசம். நன்றி.”
👉 மேடையில் இருந்து இறங்கியபின், அம்மா கூப்பிடும்போது மதிக்காமல் சென்ற #க்கட்சி விஜய் 🤦♂️😢😡
#TVKபரிதாபங்கள் #TVKFlag pic.twitter.com/8WDfwocmYO
இதையடுத்து தந்தையை எதிர்த்தே கேஸ் போட்டார். பிறகு மகனுக்கும் பெற்றோருக்குமான உறவு என்பது அந்தளவுக்கு ஒட்டாமல் போனது. தனது தந்தையின் 60 ஆவது பிறந்தநாள் விழாவுக்கு கூட விஜய் வரவில்லை.
ரசிகர்கள் மத்தியில் எப்போது விஜய் பேசினாலும், தாய், தந்தையரை கவனித்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்துவார். ஆனால் அவரே தனது தாய் , தந்தையை மதிப்பதில்லை என விமர்சிக்கப்பட்டது.
அது போல் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த லியோ பாடல் வெளியீட்டு விழாவின் போது கூட தாய் ஷோபாவும் , தந்தை சந்திரசேகரும் வந்திருந்தனர். அப்போது விழாவுக்கு வந்த விஜய், எல்லாரையும் கை குலுக்கி வரவேற்றார். அப்போது சந்திரசேகரை கட்டி அணைத்து வரவேற்றார். பிறகு தாயிடம் கைகுலுக்கினார்.
ஆனால் தனது பிள்ளையை அரவணைக்க வேண்டும் என்று எத்தனை நாள் ஏக்கமோ, அது அன்றைய தினம் அவர் அருகே இருந்தும் முடியவில்லை என்பது ஷோபாவின் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. அப்போதும் ஷோபா சிரித்துக் கொண்டே கடந்தார். பிறகு கடந்த மே மாதம் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகியோரின் தோள்களில் கைகளை போட்டபடியே விஜய் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகின.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications