மீண்டும் பவுன்சர் அணி.. தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்திலும் இறக்கிய விஜய்.. கோபத்தில் நிர்வாகிகள்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அதிகளவில் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது சர்ச்சையாகி இருக்கிறது. இதனால் தவெகவில் மட்டுமே பவுன்சர் அணி அமைக்கப்பட்டுள்ளதாக மாற்றுக் கட்சியினர் கிண்டல் செய்து வருகின்றனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதன்பின் ஒரு மாதத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் சைலண்ட் மோடுக்கு சென்றது. தொலைக்காட்சி விவாதங்கள் என்ன.. நேரடியாக ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட அக்கட்சியினர் நடத்தவில்லை. தவெக தலைமை தான் அப்படி என்றால், நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர்.

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கூட நேரில் சென்று தவெகவினர் சந்திக்கவில்லை. பின்னர் ஒரு மாதம் கடந்து, கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் வரவழைத்து மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்தார். அப்போது விஜய் தரப்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதன்பின் தவெகவில் சில மாற்றங்கள் நடந்து வருகிறது.
ஏற்கனவே தவெக நிர்வாகக் குழுவை அமைத்த விஜய், தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுவையும் கூட்டினார். மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் இன்னும் சற்று நேரத்தில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கவுள்ளது. இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இதனை தமிழக வெற்றிக் கழக தலைமையே அறிவித்துள்ளது. இந்த நிலையில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கும் ஏராளமான பவுன்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தவெக நிகழ்ச்சிகளில் பவுன்சர்களின் செயல்பாடுகள் அக்கட்சி தொண்டர்களாலேயே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மதுரை மாநாட்டில் பவுன்சர்களுடன் ஏராளமான தவெக தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல் மாமல்லபுரத்தில் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்த போது, அங்கு அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் வந்தார். காரில் வந்த அவரை அனுமதிக்காமல் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதி என்று தவெக பொருளாளரிடமே பவுன்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்பின் சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்டு வெங்கட்ராமன் உள்ளே அனுமதிக்கப்பட்டார். இதனால் தவெகவில் பவுன்சர்களை பயன்படுத்துவதை குறைத்து, தன்னார்வலர்கள் அணியை உருவாக்க வேண்டும் என்று கருத்து ஏற்பட்டது. அதற்கேற்ப விஜய்யும் தொண்டர் அணியை மாவட்ட வாரியாக அறிவித்தார்.
ஆனால் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அதிகளவில் பவுன்சர்கள் காணப்படுகின்றனர். இதனால் தவெகவிடம் மட்டுமே பவுன்சர் அணி இருப்பதாக கிண்டல்கள் எழுந்துள்ளன. இதனால் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் விஜய் பவுன்சர்களை பயன்படுத்துவதை மாற்ற வேண்டும் என்ற குரல் வலுவாக கிளம்பியுள்ளது.
-
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம் -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications