தவெக சார்பில் இன்று இப்தார் நோன்பு! ஒரு நாள் முழுக்க நோன்பிருக்கும் விஜய்! ப்ளூ பிரிண்ட்டும் ரெடியாம்!
சென்னை: ரமலான் மாதத்தையொட்டி தவெக சார்பில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் விஜய் பங்கேற்கிறார்.
ரமலான் நோன்பு இந்த மாதம் 2ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமிய சகோதர சகோதரிகள் நோன்பு இருந்து கூட்டு பிரார்த்தனைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் இப்தார் நோன்பு அரசியல் கட்சிகளால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அது போல் தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கலந்து கொள்கிறார்.
சுமார் 3 ஆயிரம் பேர் இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி மாலை 6.20 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடிக்கும் என சொல்லப்படுகிறது. இன்று விஜய்யும் ஒரு நாள் முழுமையாக நோன்பு இருந்து இஸ்லாமியர்களின் வழிமுறைபடி தொழுகை செய்து இப்தார் விருந்தை எடுத்துக் கொள்கிறார்.
ராயப்பேட்டை, திருவல்லிக்கேணியை சேர்ந்த மசூதிகளின் நிர்வாகிகளுக்கும் சிறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. யார் எங்கு அமர வேண்டும், விஜய்யின் இருக்கை எது என்பது குறித்தெல்லாம் ப்ளூ பிரண்ட்டும் தயார் செய்யப்பட்டுள்ளதாம்.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்!












Click it and Unblock the Notifications