தவெகவில் ஜனநாயகம் இல்லையாமே! நிர்வாகிகளுக்கே சென்சார் போட்ட புள்ளிகள்! விஜய்க்கு தெரியுமா? தெரியாதா?
சென்னை: தமிழக வெற்றி கழகத்தில் சமீபத்தில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள், பேச்சாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பொதுவெளியில் டெல்லி சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் குறித்து பேசவே கூடாது என தலைமை கட்டுப்பாடு விதித்திருப்பதாக சொல்கின்றனர். மேலும் சிலரை தொலைக்காட்சி விவாதங்களில் கூட பேசக் கூடாது, விஜய்க்கு ஆதரவான ட்விட்களை ரீட்விட் செய்யக் கூடாது என கூட கட்டுப்பாடு விதித்திருப்பதாக சொல்லப்படுகிறது
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் கட்சியை ஆரம்பித்த போது, அக்கட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக கட்சி சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவதற்கு கூட திறன் வாய்ந்த பேச்சாளர்கள் இல்லை, கட்சியை வழிநடத்திச் செல்ல சீனியர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு தான் அது.
அந்தக் குறையை போக்கும் விதமாக நீண்ட நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பனையூர் கதவு திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கியமான தலைவர்கள், ஊடகவியலாளர்கள், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய தொடங்கினர்.

தவெக கட்டுப்பாடுகள்
அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பிரபல ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் சேர்ந்த உடனேயே பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த நாஞ்சில் சம்பத் ஒன்று விடாமல் அனைத்து ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்தார். மேலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சும் ஊடகங்களில் தலைப்பு செய்தியானது.
சென்சார் சான்றிதழ்
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு விஜய் உட்படுத்தப்பட்டிருக்கிறார். இது பாஜகவின் சதி என சில தலைவர்கள் பேட்டி கொடுத்தனர். மேலும் விஜயின் கடைசி படமான ஜனநாயக திரைப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் வெளியாகவில்லை. அதற்கும் பாஜக தான் காரணம் என சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தது.
சிபிஐ விசாரணை
இந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கக் கூடாது என்பதற்காக விஜய் தவிர வேறு யாரும் டெல்லி சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படம் குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி தரக் கூடாது, சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவிக்கக் கூடாது, ஏன்? இது தொடர்பாக பிறர் கருத்து தெரிவித்திருந்தாலும் அதனை ரீட்வீட் கூட செய்யக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
நாஞ்சில் சம்பத்
மேலும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்த நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவரை அவ்வாறு பேட்டி தரக் கூடாது என சொல்லி விட்டார்களாம். அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் இருந்த போது அடிக்கடி ஊடகங்களை சந்தித்து பேட்டி தந்த நாஞ்சில் சம்பத், புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பிறகு இப்படி கட்டுப்பாடு விதிக்கிறார்களே என அவர் புலம்பியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்த பிறகு செங்கோட்டையனக்கு மரியாதை குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில் தற்போது நாஞ்சில் சம்பத்தும் அந்த பட்டியலில் இணைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
-
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
சிவகார்த்திகேயனுக்கு சனி பிடித்துவிட்டது.. நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு.. மீண்டும் சிக்கிய தவெக -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications