அஜித் குமாருக்கு வாழ்த்து சொல்லலையா.. முதல் அழைப்பே தவெக தலைவரிடம் இருந்துதான்.. வெளியான சீக்ரெட்!
சென்னை: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட போது, நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து கூறவில்லை என்ற தகவல் குறித்து சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அஜித் குமார் கார் ரேஸில் வென்ற
போது முதல் வாழ்த்து வந்ததே விஜய்யிடம் இருந்து தான் என்று கூறிய அவர், விருது அறிவிக்கப்பட்ட உடன் விஜய் அழைத்து வாழ்த்தியதாகவும் கூறி இருக்கிறார்.
76வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு தரப்பில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. சினிமாவில் 30 ஆண்டுகளாக
செய்த பங்களிப்பிற்காக அஜித் குமாருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் குமாருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் அஜித் குமாரின் சமகால போட்டியாளரான நடிகர் விஜய் வாழ்த்து கூறவில்லை. ஏற்கனவே துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்தது. அதுமட்டுமல்லாமல் அஜித் குமாருக்கு ஸ்பெஷல் விருதும் அளிக்கப்பட்டது. அப்போது தவெக தலைவரும், நடிகருமான விஜய் எந்த வாழ்த்தையும் கூறவில்லை.
அடுத்தடுத்து 2 சம்பவங்களிலும் விஜய் மவுனமாக இருப்பதாக பார்க்கப்பட்டது. இதனிடையே விஜய் அரசியலுக்கு வந்ததால், அஜித் குமாருக்கு மத்திய அரசு விருது கொடுத்திருப்பதாக சில விவாதங்களும் எழுந்தன. இதனால் சோசியல் மீடியாவில்
விஜய் மற்றும் அஜித் குமார் ரசிகர்களிடையே ஜாலியான ட்ரோல்களும் அரங்கேறின.
இந்த நிலையில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்.6ஆம் ரிலீஸாக உள்ளது. இதனையொட்டி அஜித் குமார் மேனேஜரான சுரேஷ் சந்திரா சில நேர்காணல்களை அளித்து வருகிறார். அதில் அஜித் குமாருக்கு விஜய்
வாழ்த்து சொல்லாதது குறித்த கேள்விக்கும் பதில் அளித்திருக்கிறார். அவரின் பதில்கள் இரு தரப்பு ரசிகர்களையும் குஷியாக்கியுள்ளது.
அதில், துபாய் 24H கார் ரேஸில் அஜித் குமார் வென்ற பின் முதல் வாழ்த்து வந்ததே விஜய் சாரிடம் இருந்து தான். அதன்பின் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதும் விஜய் சாரிடம் இருந்து உடனடியாக வாழ்த்து
வந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் எப்போதும் நல்ல நட்பு இருந்து வருகிறது. அதனால் விஜய் சார் வாழ்த்து கூறவில்லை என்பதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் அவை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications