விஜய் பையில் கத்தரிக்கோல்.. தனி விமானத்தில் அனுமதி மறுப்பு.. சிபிஐ விசாரணைக்கு புறப்பட்டபோது பரபரப்பு
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் அவரது பேக்கில் கத்தரிக்கோல் இருந்தது. இதையடுத்து அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ம் தேதி கரூரில் தவெக பிரசார கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 41 பேர் இறந்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக விஜயிடம் 2 முறை சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது.
இந்நிலையில் தான் 3வது முறையாக விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் அ்னுப்பி வைக்கப்பட்டது. வேட்பாளர்கள் நேர்க்காணல் இருந்ததால் அவர் காலஅவகாசம் கோரினார். இதையடுத்து நாளைய தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ கேட்டு கொண்டது. இதையடுத்து நாளைய விசாரணைக்காக விஜய் இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.
இதற்காக அவர் சென்னையில் உள்ள விமான நிலையத்துக்கு காரில் வந்தார். அதன்பிறகு அவர் காரில் இருந்து இறங்கி விமான நிலையத்துக்கு சென்றார். விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விஜயின் பேக்கை சோதனை செய்தனர். அப்போது அதில் கத்தரிக்கோல் இருந்தது. விமானத்தில் கத்தரிக்கோல் உள்பட கூர்மையான பொருட்களை எடுத்து செல்ல தடை உள்ளது.
இதனால் விஜய் தனி விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. அவரை காத்திருக்க வைத்தனர். அந்த கத்தரிக்கோல் எதற்காக விஜய் தனது பையில் வைத்திருந்தார் என்பது உடனடியாக தெரியவில்லை. தெரியாமல் இருந்ததா? இல்லை வேறு காரணங்களுக்காக விஜய் எடுத்து சென்றாரா? என்பது தெரியவில்லை. கத்தரிகோல் பறிமுதல் செய்யப்பட்டது.
பிறகு விஜய் பையில் எந்த ஆயுதங்களும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு விஜய் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு விஜய் ர் தனி விமானத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் தனி விமானம் அரை மணிநேரம் வரை தாமதமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
விஜயுடன் தவெக நிர்வாகியான சிடிஆர் நிர்மல் குமார், விஜயின் உதவியாளர் ஜெகதீஷ், டிரைவர் ராஜேந்திரன் உள்பட 7 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு!












Click it and Unblock the Notifications