முரசொலி செல்வம் உடலுக்கு நடிகர் விஜயின் மனைவி சங்கீதா நேரில் அஞ்சலி.. குடும்பத்தினருக்கு ஆறுதல்
சென்னை: மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா நேரில் அஞ்சலி செலுத்தினார். முரசொலி செல்வத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் பெங்களூரில் இன்று உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார். முரசொலி செல்வம் மறைவு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திமுக தலைவர்கள், அரசியல் கட்சியினர் முரசொலி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை பெங்களூரில் இருந்து சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு முரசொலி செல்வம் உடல் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முரசொலி செல்வம் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
அமைச்சர் துரைமுருகன், வைகோ, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து குடும்பத்தினரை கட்டியணைத்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து முரசொலி செல்வம் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் பெங்களூரில் வசித்து வந்தார். தமது தாய்மாமாவான கருணாநிதியின் மகள் செல்வியை முரசொலி செல்வம் திருமணம் செய்து கொண்டார். பல்வேறு திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் முரசொலி செல்வம். முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற தலைப்பில் நீண்ட ஆணித்தரமான கட்டுரைகளை முரசொலி செல்வம் தான் எழுதி வந்தார். செல்வி - முரசொலி செல்வம் தம்பதியினருக்கு எழிலரசி ஜோதிமணி என்ற மகள் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications