சாமானிய தொண்டர்களுக்கு சித்ரவதை.. கேரவனுக்குள் ஒழிந்துகொண்ட விஜய்.. பாயிண்டை பிடித்த திமுக!
சென்னை: தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்குத் தண்ணீர் கொடுக்காது இளைப்பாறக் கூடாரம் போடாது தடுப்பு வேலியில் க்ரீஸ் தடவி சாமானிய தொண்டனைச் சித்ரவதைப் படுத்தி மாற்று அரசியலைத் தருகிறேன் என கேரவனுக்குள் ஒழிந்துகொண்டு படம் காட்டுகிறார் நடிகர் விஜய் என்று திமுக விமர்சனம் செய்துள்ளது.
மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு நடக்கும் நிலையில் அங்கே பந்தல் போடாதது மக்கள் இடையே விமர்சனங்களை சந்தித்துள்ளது. மாநாட்டை நோக்கிப் படையெடுக்கும் தொண்டர்கள் பலரும் இதனால் அவதிப்பட்டுவருகின்றனர் . வெயில் தாங்க முடியாமல் 10 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

இவ்வளவு செலவு செய்யும் போது கூடவே மேல பந்தலும் போட்டு இருக்கலாம் தவெக என்று நிர்வாகிகள் குரல் எழுப்ப தொடங்கி உள்ளனர்
திமுக தவெக கண்டனம்
இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் ராஜிவ் காந்தி செய்துள்ள போஸ்டில், சேலத்தில் ஐந்து லட்சம் இளைஞர்களைக் கூட்டி 12 ஏக்கருக்குப் பந்தல் போட்டு அரசியல் அறிஞர்களைப் பேச வைத்து மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பேசினாலும் அதுவரை தொண்டர்களை நிழலில் அமர வைத்து குடிக்கத் தண்ணீரும், தேநீரும், உண்ண சைவ, அசைவ உணவும் கொடுத்து புகைப்படத்தில் கூட்டம் தெரியவில்லை என்றாலும் வந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாநாடு நடத்தியவர் எங்கள் உதய் அண்ணா!!
வந்த தொண்டர்களுக்குத் தண்ணீர் கொடுக்காது இளைப்பாறக் கூடாரம் போடாது தடுப்பு வேலியில் க்ரீஸ் தடவி சாமானிய தொண்டனைச் சித்ரவதைப் படுத்தி மாற்று அரசியலைத் தருகிறேன் என கேரவனுக்குள் ஒழிந்துகொண்டு படம் காட்டுகிறார் நடிகர் விஜய்...
தடுப்புகளில் க்ரீஸ் தடவும் நீங்கள் தியேட்டர் இருக்கைகளிலும் அன்று க்ரீஸ் தடவி இருந்தால் இந்த ரசிகக் கூட்டம் உங்களின் கோர முகத்தை அப்போதே புரிந்துகொண்டிருக்கும் Mr சுயநலம், என்று கூறி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு
மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநாட்டு திடலுக்கு நள்ளிரவில் இருந்தே தொண்டர்கள் குவிந்த நிலையில் விஜய் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை முடிக்க தவெக திட்டமிடப்பட்டு உள்ளது. தவெக மதுரை மாநாட்டில் விரைவாகவே விஜய் சிறப்புரை ஆற்ற உள்ளார். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில், அவனியாபுரம் விமான நிலையம் வழியாக தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்த மாநாட்டுத் திடல் அமைந்துள்ளது. எலியார்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து 2 கி.மீ. தூரத்திலேயே சாலையின் இருபுறமும் தவெக கொடிகள் பறக்க, "மக்கள் விரும்பும் முதல்வர்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அணிவகுத்து நிற்கின்றன.
சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாநாட்டுத் திடலின் பெரும்பகுதி பச்சை விரிப்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேடை நிகழ்வுகளை அனைவரும் காணும் வகையில் 50-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் மாநாட்டுத் திடல் முழுவதும் பொருத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications